அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
தேவனூர்
விழுப்புரம் |
செஞ்சியிலிருந்து வடமேற்கில் 12 கி.மீ |
நாகேஸ்வரர் காமாட்சி அம்மன் ஸ்தலமரம் வில்வம். உத்தமசோழர் கட்டிய கோயில். அருணகிரிநாதர் 3 திருப்புகழ் பாடல் பாடி உள்ளார். |
அருள்மிகு இராமலிங்கசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு இராமலிங்கசுவாமி திருக்கோயில்
கஞ்சனூர்
விழுப்புரம் |
விழுப்புரம்-திருவண்ணாமலை செஞ்சி பாதையில் 12வது கி.மீல் இறங்கி கிளைப்பாதையில் 2 கி.மீ செல்லவும். |
கஞ்சனூர் என்று வழங்குகின்றது. இராமலிங்கசுவாமி கோயில் நல்ல பராமரிப்பு |
அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில்,
முன்னூர், விழுப்புரம். |
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது திண்டிவனம். இங்கிருந்து மரக்காணம் செல்லும் வழியில், சுமார் 19-வது கிலோ மீட்டரில் உள்ளது ஆலங்குப்பம் கிராமம். இந்த ஊரில் இருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில், சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால், முன்னூரை அடையலாம். |
யம பயம் போக்கும் இந்தத் திருத்தலத்துக்கு வந்து, சிவனாரையும் உமையவளையும் வழிபட்டால் பித்ரு சாபம் நீங்கும். முன்னோர் ஆசி முழுவதுமாகக் கிடைக்கும். தெற்குப் பார்த்த ஸ்வாமி இவர். அதனால், வியாழக்கிழமைகள் இங்கே வந்து, ஆடவல்லீஸ்வரரையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது ஞானத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. |
|
|