அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்,
மண்டப சாலை, விருதுநகர். |
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. |
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இந்த கோயில் நூறாண்டுக் காலப் பழமைமிக்கது. மூலவராக சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். அவருக்கு இருபுறமும் நாகர்களும், எதிரே மூஷிக வாகனமும் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயிலருகே வசித்து வந்த வயதான பெண்மணி ஒருவர் சித்தி விநாயகர் மேல் பக்தி கொண்டு அவரை தினந்தோறும், வணங்கி வந்தார். சில நாட்களிலேயே அவரது குடும்ப வறுமை மெல்ல மெல்ல விலகி வசதியான நிலைக்கு மாறினார். அவரும் அவரது சந்ததியினரும் கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்திருக்கிறார்கள். சாதாரண மக்களை சாதனையாளர்களாகவும், சிறு தொழில் செய்பவர்களை பெரிய தொழில் அதிபர்களாகவும் மாற்றியிருக்கிறார் இந்த சித்தி விநாயகர். தொழில், வியாபாரம் வேலையில் வளர்ச்சியும்; அதில் பிரச்னை ஏற்படும்போது நல்ல தீர்வு கிடைக்கவும் இவர் அருள்கிறார். மேலும் புதிய தொழில் துவங்குவோர் இவரது ஆசியுடன் தொடங்கினால் குறுகிய காலத்திலேயே தொழில் வளர்ச்சி பெறுகிறது. |
|
|