இந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அம்பாள் அன்னபூரணி சிலை தங்கத்தால் ஆனது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோகர்ண நாதேஸ்வரர், அன்னபூரணி, மகாகணபதி, சுப்ரமணியர், காலபைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், நாராயணகுரு சன்னதிகளில், அலங்காரம் செய்து ஆரத்தி வழிபாடு செய்வதை சர்வ சேவை என்கின்றனர்.
பிரார்த்தனை
கல்வி, கலையில் மேம்பட இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. நோய்கள் விலக, எமபயம், எதிரி பயம் நீங்க இங்கு வழிபடுகின்றனர்.
கல்வியிலும், கலைத்துறையிலும் மேம்படுவதற்கு கர்நாடகா மங்களூரு குத்ரோலி கோகர்ணா கோயிலில் சர்வசேவை வழிபாடு செய்கின்றனர்.
சர்வ மத மகாருத்ர அபிஷேகம்: ஸ்ரீ ருத்ர மந்திரத்தை ஜெபித்து செய்யும் அபிஷேகத்தை ருத்ராபிஷேகம் என்பர். எல்லா மதத்தினரும் இதைச் செய்கின்றனர். இதைச் செய்வதால் நோய்கள் விலகும், எமபயம், எதிரி பயம் நீங்கும் என்ற நம்பிக்கையுள்ளது. கல்யாணி தீர்த்தம்: கோயிலில் கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு கரைகளிலும் சிவன் சிலைகளும், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக்கவர்கிறது. சனி, ஞாயிறு மாலை 6.30ல் இருந்து இரவு 8.30வரை வண்ண நீரூற்று 120 அடி உயரத்துக்கு பனிலிங்க வடிவில் உயர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற பெயரில் கும்ப வடிவிலான கலசக் கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும், நாராயண தீர்த்தத்தில் உப்புச்சுவை குறைந்த தண்ணீர் உள்ளது. ஆஞ்சநேயருக்கு தங்கத்தால் ஆன சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது. மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் கண்ணைக் கவர்கின்றன.
மங்களூரு தசரா: விஜயதசமியை ஒட்டி மங்களூருவில் தசரா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வேடமிட்டு வந்து வழிபடுவர். நவதுர்க்கை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுகிறது.
தல வரலாறு:
தெற்கு கர்நாடகாவின் ஒரு பகுதியை துளுநாடு என்று அழைத்தனர். இங்கு பில்லவ இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 19ம் நூற்றாண்டில் ஆலய பிரவேசம் மறுக்கப்பட்டது. போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. அப்போது கேரளாவில், நாராயண குரு பக்தி இயக்கம் நடத்திவந்தார். எல்லாருக்கும் கடவுளை வணங்கும் உரிமையுண்டு என்ற அடிப்படையில் 301 கோயில்கள் கட்டினார். அனைத்து சமூகத்தினரையும் வழிபடச் செய்தார். தங்கள் பிரச்னையை தீர்க்க, பில்லவ இன தலைவர்கள் இவரை அணுகினர். அவரது ஆலோசனைப்படி 1912ல், குத்ரோலியில் சிவன் கோயில் கட்டப்பட்டது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோகர்ணநாதேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அம்பாள் அன்னபூரணி சிலை தங்கத்தால் ஆனது.