Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வராஹமூர்த்தி
  ஊர்: பன்னியூர்
  மாவட்டம்: பாலக்காடு
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  தை அஸ்வினி பிரதிஷ்டா நாள் (வராஹர், சிவன்), தைப்பூசம், வராஹ ஜெயந்தி, சித்திரை விஷூ.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள வராஹர் லட்சுமிக்கு பதிலாக பூமாதேவியை மடியில் தாங்கியிருக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர், பாலக்காடு,கேரளா.  
   
போன்:
   
  +91 466- 202 2125 
    
 பொது தகவல்:
     
  லட்சுமி நாராயணர், விநாயகர், ஐயப்பன், துர்க்காதேவி, முருகன் சன்னதிகளும் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  நிலத்தை பிறர் அபகரித்து விட்டதாக வருத்தப்படுபவர்கள், மனதில் நினைத்தது நடக்கவும், திருமணத்தடை நீங்கவும், மூன்று மாதங்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களில் ருக்மணி கிருஷ்ண பூஜை செய்யலாம். வேலை கிடைக்கவும், வீடு கட்டவும் நிலத்திலுள்ள மண்ணை எடுத்து அபீஷ்ட சித்தி பூஜை நடத்துகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள சுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கேரளத்தில் வராஹ வடிவில் மகாவிஷ்ணுவின் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில் இது. மாலை நேரத்தில் குடும்பத்துடன் வராஹ மூர்த்தியை வழிபடுவது விசேஷம். இவர் மூன்றரை அடி உயரம் உள்ளவர். மனதில் நினைத்தது நடக்கவும், திருமணத்தடை நீங்கவும், மூன்று மாதங்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களில் ருக்மணி கிருஷ்ண பூஜை செய்யலாம். வேலை கிடைக்கவும், வீடு கட்டவும் நிலத்திலுள்ள மண்ணை எடுத்து அபீஷ்ட சித்தி பூஜை நடத்துகின்றனர். சிவன் சந்நிதியில், மார்கழி மாத முதல் திங்கள்கிழமை ஆயிரம் குடம் புனிதநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. லட்சுமி நாராயணர், விநாயகர், ஐயப்பன், துர்க்காதேவி, முருகன் சந்நிதிகளும் உள்ளன. 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோயிலில் திருப்பணி துவங்கியுள்ளது.  
     
  தல வரலாறு:
     
  மன்னர்களுடன் போரிட்ட பரசுராமர், தான் பெற்ற இடங்களை கஷ்யபருக்கு தானமாக வழங்கினார். பின் தவம் செய்வதற்காக இடம் தேடினார். கடலை நோக்கி தனது பரசுவை (கோடரி) எறிந்தார். அது விழுங்கியிருந்த இடத்தை மீட்டார். அந்த இடம் தான் கேரளதேசம். கடலில் இருந்து வந்த அந்த பூமி, திடமாக இல்லாமல் இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. அதனைச் சரிப்படுத்த எண்ணிய பரசுராமர், நாரதரின் உதவியை நாடினார். அவரின் வழிகாட்டுதலால் விஷ்ணுவை எண்ணி தவமிருந்தார். விஷ்ணு நேரில் காட்சியளித்து,  பூமியைக் காப்பதற்காக, நான் எடுத்த வராஹமூர்த்தி கோலத்தை இங்கு பிரதிஷ்டை செய்தால் பிரச்னை தீரும், என்று அருள்புரிந்தார். அதன்படி வராஹர் சிலையை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார். இதன் காரணமாக இங்கு  வழிபட்டால், நிலப்பிரச்னையில் நல்ல  தீர்வு கிடைக்கும் என்கின்றனர். மேலும், வராஹரின் மடியில் பூமாதேவியும் இருப்பதால்,இவ்விஷயத்தில்இரட்டிப்பு நன்மை கிடைக்கும். மூலவர் நான்கு கைகள் உடையவர். வலது கீழ்கையில் தாமரை, இடது கீழ்கையில் கதை உள்ளது. வராஹம் என்றால் பன்றி. இதை அனுசரித்து ஊரின் பெயரும் பன்னியூர் ஆனது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள வராஹர் லட்சுமிக்கு பதிலாக பூமாதேவியை மடியில் தாங்கியிருக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar