Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு கனக மஹாலெட்சுமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கனக மஹாலெட்சுமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கனக மஹாலெட்சுமி
  ஊர்: புருஜுப்பேட்
  மாவட்டம்: விசாகப்பட்டினம்
  மாநிலம்: ஆந்திர பிரதேசம்
 
 திருவிழா:
     
  நவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள மகாலெட்சுமி வலது கையில் தாமரையுடன், இடது கை முழங்கை வரை மட்டுமே உள்ள நிலையில் அருள்பாலிப்பதும், பக்தர்கள் தாங்களே அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து கொள்வதும் இத்தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட், விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேசம்.  
   
போன்:
   
  +91 891 2566 515, 2568 645, 2711 725, 9491000651 
    
 பொது தகவல்:
     
  புருஜு என்றாள், அரசர்களின் கோட்டையில் வெளிப்பகுதி! விசாகப்பட்டினத்து அரசர்களின் குலதெய்வமாக கோட்டையின் காவல் தெய்வமாக, விளங்கியிருக்கிறாள் இந்த வீரலெக்ஷ்மி! கோபுரம், விமானம் என்று தனிப்பட்ட, கோயிலுக்கு உரிய வெளி அமைப்புகள் ஏதும் இல்லை. சாலையின் நடுவில் சப்தம் நிறைந்த பகுதியில் தேவி கொலு வீற்றிருக்கிறாள். 1912ல், சாலையை அகல்படுத்தும் பணிக்காக தேவியை வேறு இடத்தில் மாற்றி அமைத்தார்களாம். அப்போது ஊரில் ப்ளேக் நோய் தாக்கி பலர் இறந்துவிட்டார்களாம். தேவியை மறுபடி அதே இடத்தில் ஸ்தாபனம் செய்த பிறகுதான் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாம். பிறகு, 1917ல் மீண்டும் ஒரு எளிய கோயிலை அமைத்து இருக்கிறார்கள். விசாகபட்டினத்தின் மன்னர் விசாக மஹாராஜா வழிபட்ட இஷ்ட தெய்வமாகும்.  
     
 
பிரார்த்தனை
    
  இந்தக் கோயிலில், பக்தர்கள் தாங்களே தேவிக்கு பூஜை செய்யலாம். குங்குமம், மஞ்சள் பொடி, மலர்கள் கொண்டு பூஜை செய்யலாம். புடைவை சார்த்தலாம். தேங்காயை உடைத்து, இளநீரை அபிஷேகம் செய்யலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பக்தர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும் நடைபெறுகிறது! 
    
நேர்த்திக்கடன்:
    
  சபரிமலையைப் போலவே பச்சை ஆடை உடுத்தி, பச்சை மணிமாலை அல்லது துளசி மணிமாலை அணிந்து, விரதம் இருந்து கடைசி நாள் பஞ்சாமிர்த அபிஷேகம், குங்கும அபிஷேகம் செய்வித்து சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

லக்ஷ்மி சாந்த வடிவினள் என்பார்கள். ஆனால் ரவுத்திர ரூபமாக இருந்து, அமைதிபெற்ற தேவியாக இங்கு விளங்குகிறாள். வியாழக்கிழமைகளில் ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இந்த ஊர் மக்கள், வீட்டின் ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஆதிலக்ஷ்மியின் அனுக்ரஹத்தைத்தான் முதலில் வேண்டுகிறார்கள். வலது கையில் தாமரையுடன் இடது கை முழக்கை வரை மட்டுமே உள்ளது. சர்வாலங்கார பூஷிதையாக முகத்தில் தேஜஸுடன் கனிவுடன் திகழ்கிறாள் ஆதிலக்ஷ்மி தேவி. தங்க கலசத்தில் கண்கள் திறந்து காணப்படுகின்றன! நமது ஊரில் அர்ச்சாவதாரம் சேதப்பட்டால் தகுந்த பூஜைகளும் பரிகாரங்களும் செய்து சிலையை மாற்றி விடுவார்கள்! இங்கு இந்த பின்னத்துடன் இருந்து தேவி சிறப்பு பெறுகிறாள்!

ராஜராஜேஸ்வரி மற்றும் அஷ்டலெக்ஷ்மி உருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன! அருகிலேயே தேவி வெளிப்பட்ட கிணறும் உள்ளது. அதற்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. சபரிமலைக்கு மாலை போடுவது போல் மார்கழி மாதத்தில் மாலை தீட்சை பெற்றுக்கொண்டு, 40 நாட்கள் அல்லது 48 நாட்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். பச்சை ஆடை உடுத்தி, பச்சை மணிமாலை அல்லது துளசி மணிமாலை அணிந்து, விரதம் இருந்து கடைசி நாள் பஞ்சாமிர்த அபிஷேகம், குங்கும அபிஷேகம் செய்வித்து சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். அந்த சமயத்தில் தினமும் ஒரு லட்சம் மக்கள் தேவியை தரிசனம் செய்வதாக சொல்கிறார்கள்.

 
     
  தல வரலாறு:
     
 

இங்கு தேவி கோபமிக்க சக்தி ஸ்வரூபமாக, இங்குள்ள ஒரு கிணற்றில் பல யுகங்களாக மறைந்து இருந்தாளாம். கலியுக ஆரம்பத்தில், ஓர் அந்தணர் மோட்சம் தேடி இந்த வழியாக காசிக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில், ஒரு கிணறு! அதன் உள்ளிருந்து ஒரு பெண் குரல்! என்னை வெளியில் எடுத்து கோயில் அமைப்பாயாக! என்று சிம்ம கர்ஜனையுடன் கூறியது. கிணற்றை எட்டிப்பார்த்த அந்தணர் திடுக்கிட்டார். மிகவும் அழகான தெய்வாம்சம் பொருந்திய உருவம்! ஆனால் கண்களில் கனல்! தாயே! என்னை மன்னித்துவிடு. நான் காசியை நோக்கி செல்கிறேன். முக்தி தேடிச் செல்லும் என்னிடம் கோயில் அமைக்க உடல் வலிமை இல்லை. பொருள் வசதியும் இல்லை. என்று வேண்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

ஆத்திரமடைந்த தேவி, கோடரி போன்ற ஆயுதத்தை இடது கையில் எடுத்தாள். சாதுவை நோக்கிக் குறி வைத்தாள். இதை உணர்ந்த கயிலை நாதனான சிவபிரான், தேவியின் இடது கையைத் துண்டித்தார். அம்பிகையை, சினம் தணித்து சாந்த ரூபமாக மாறும்படி பணிந்தார்! சங்கரனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு கருணை வடிவாக உருமாறினாள் மஹாலக்ஷ்மி! அங்கேயே அந்த முதியவருக்கு மோட்சமும் அருளினாள் என்கிறது தலபுராணம்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மகாலெட்சுமி வலது கையில் தாமரையுடன், இடது கை முழக்கை வரை மட்டுமே உள்ள நிலையில் அருள்பாலிப்பதும், பக்தர்கள் தாங்களே அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து கொள்வதும் இத்தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar