கருவறையில் கோதண்டபாணியாய் அழகு கோலம் காட்டுகிறார் ராமச்சந்திர மூர்த்தி. இடது கையில் கோதண்டமும் வலது கையில் ராம பாணமும் ஏந்தியிருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் மணி 10 வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,
ஒண்டிமிட்டா, கடப்பா மாவட்டம்
ஆந்திர மாநிலம்.
பொது தகவல்:
ஸ்ரீராம சேத்திரங்களில் குறிப்பிடத்தக்க தலம் இது. ராமாயணம், மகாபாரதக் கதைகள், தசாவதார காட்சிகள், சேதுபந்தன வைபவம், கோவர்த்தனகிரி மற்றும் காளிங்கநர்த்தனம் என ஆலய மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் வெகு அழகு. இவை தவிர, சீதா கல்யாண வைபவத்தில் ராமன் - சீதை எதிர்கொள்ளல், முகப்பில் காளி கோபுரத்தில் தென்படும் பசு - யானை மற்றும் நடனச் சிற்பங்களும் ரசிக்கத்தக்கவை.
பிரார்த்தனை
இங்கு வந்து சந்தானகோபால (சாளக்கிராம) ஸ்வாமி பூஜை செய்ய, குழந்தை இல்லாதவர்களுக்கு, அந்த பாக்கியம் விரைவில் கிடைக்கும். மேலும் ஈசான்ய பாகத்தில், விஷ்ணு பாதம் உள்ள புற்றை 11 முறை வலம் வந்து வழிபடுவதாலும் சந்தான பாக்கியம் பெறலாம்; கீர்த்தியும் கல்யாண பாக்கியமும் கைகூடும்.
நேர்த்திக்கடன்:
கருவறையில் கோதண்டபாணியாய் அழகு கோலம் காட்டுகிறார் ராமச்சந்திர மூர்த்தி. இடது கையில் கோதண்டமும் வலது கையில் ராம பாணமும் ஏந்தியிருப்பது சிறப்பு.
தலபெருமை:
முதலில் கருவறையுடன் சிறிய கோயிலாக திகழ்ந்தது இன்று பெருங்கோயிலாக உள்ளது. சோழர் காலச் சிற்பங்கள் மற்றும் சில கல்வெட்டுகள் மூலம் ஆலயச் சரித்திரம் தெரியவருகிறது. இன்னும் சில கல்வெட்டுகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்கள் குறித்துத் தெரிவிக்கின்றன. விஜயநகர திருப்பணிகளும் இந்தக் கோயிலுக்கு உண்டு.
கருவறையில் கோதண்டபாணியாய் அழகு கோலம் காட்டுகிறார் ராமச்சந்திர மூர்த்தி. இடது கையில் கோதண்டமும் வலது கையில் ராம பாணமும் ஏந்தியுள்ளார். வலப்புறம் லட்சுமணனும், இடப்புறத்தில் சீதையும் உள்ளனர். இந்தக் கோதண்டபாணியை ஒருமுறை தரிசிக்க, சத்ரு தொல்லைகள் யாவும் நீங்கும். இங்குள்ள ஆஞ்சநேயர், அஞ்சலி ஹஸ்தத்துடன் தனிச் சன்னதி கொண்டிருக்கிறார்; ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் இருக்கும் ஸ்ரீதேவி - பூதேவி சமேத நாராயணரையும் இங்கு தரிசிக்கலாம். பாஞ்சராத்ர முறைப்படி பூஜைகள் நிகழும் இந்த ஆலயத்தில், ஸ்ரீராம நவமி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
ராமாப்யுத்யம் எனும் ஞானநூலை இயற்றிய, அய்யலராஜு ராமபத்ரன் என்பவருக்கு சிறு வயதிலேயே சீதாதேவியின் அனுக்ரகம் வாய்த்தது. மகான் பம்மரே போதனாமத்யுலு என்பவர், தெலுங்கில் ஸ்ரீமத் பாகவதம் இயற்றியது இவ்வூரில்தான். அப்போது, சில விஷயங்கள் சிந்தைக்கு எட்டாமல் தடைப்பட, ஸ்ரீராமனே வந்து அதை பூர்த்தி செய்தார். நவாப் ஒருவன், தனது கோட்டைக்கு (ஸித்து வடம் கோட்டை என்பர்) செல்லும் வழியில் இங்கே தங்கி இளைப்பாறினான். அப்போது, இந்தப் பகுதியில் உள்ள சிலர் கடவுள் உண்டா - இல்லையா என வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அதற்குத் தீர்வு காண, தேவஸ்தான வாயிலை மூட நவாப் முயற்சித்த போது ராம....ராம என்று பேரொலி எழுந்தது! இதில் வியந்துபோன நவாப், ஸ்வாமி அபிஷேகத்துக்காக தீர்த்தக் கிணறு வெட்டிக் கொடுத்தார். இதுபோன்று பல்வேறு அற்புதங்களை கதை கதையாய்ச் சொல்லி சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து திருப்பதி செல்லும் பாதையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது ஒண்டிமிட்டா.