Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பீமேஸ்வரர்
  ஊர்: ஓமந்தூர்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  சதுரமான கருவறையின் நடுவில் 6 அடி உயரத்தில் மூலவர் பீமேஸ்வரர் பிரம்மாண்டமாக மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது சிறப்பானதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில் ஓமந்தூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 94435 38366, 92442 12348, 99629 28179. 
    
 பொது தகவல்:
     
  கருவறையின் வெளிப்புறத்தில் தெற்கில் தாமரை மலரின் மீது விநாயகர், நாட்டிய காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தி சனகாதி நால்வருக்கு உபதேசித்தபடி இருக்கிறார். கிழக்கே திருமாலும், வடக்கே பிரம்மாவும், துர்க்கையும் எழுந்தருளியுள்ளனர். பைரவர், ராஜராஜேஸ்வரி, சூரியன், நவக்கிரகம், முருகன், நாகர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன. நந்தீஸ்வரர் சாளரத்தின் (கல் ஜன்னல்) வழியே மூலவரை தரிசித்தபடி இருக்கிறார்.
பீமேஸ்வரர் கோயில் அருகில் வைகுண்டப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் 10 அடி உயரத்தில் உள்ளார்.
 
     
 
பிரார்த்தனை
    
  பீமேஸ்வரருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் கிரகதோஷம், சர்ப்ப தோஷம் நீங்குகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

ஓம் என்பது பிரணவ மந்திரம். அந்தூர் என்றால் பாத கிண்கிணி. ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பரம்பொருளாக விளங்கக்கூடிய சிவபெருமான், மகரிஷிகளின் தவத்திற்கு இரங்கி ஆனந்தத்தாண்டவம் நிகழ்த்தினார். அப்போது சுவாமியின் பாத கிண்கிணி சத்தம் முதலில் கேட்ட ஊர் ஓமந்தூர். சதுரமான கருவறையின் நடுவில் 6 அடி உயரத்தில் மூலவர் பீமேஸ்வரரர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். சுவாமி மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது சிறப்பானதாகும். சுவாமிக்கு திருவருளீஸ்வரத் தாழ்வார், திருவீமிசுவரமுடைய நாயனார், தவப்பாதர நாயனார் என்ற பெயர்களும் உள்ளன. அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றுடன் கூடிய இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்கதாகும்.

வள்ளலின் ஊர்: கடையேழு வள்ளல்களில் ஒருவரான நல்லியக் கோடன் ஆட்சி செய்த ஒய்மா நாட்டின் ஒருபகுதியாக இத்தலம் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறிய முடிகிறது. சங்ககாலத்தில் திண்டிவனத்தைச் சுற்றிய பகுதியே ஒய்மா நாடு என்ற பெயரில் இருந்தது. ராஜராஜசோழன் கால கல்வெட்டில் ஒவ்வூர் என இத்தலம் குறிக்கப் பட்டுள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜநாராயண சம்புவராயர் கல்வெட்டில் ஒய்மாநாட்டு ஓகந்தூர் என குறிக்கப்படுகிறது. ஒவ்வூர் என்பது ஓகந்தூர் ஆகி, தற்போது ஓமந்தூர் என்று மருவி விட்டது.

 
     
  தல வரலாறு:
     
  பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலத்தில் மின்னூர் காட்டுக்கு வந்தனர். தர்மருக்கு பசித்தது. பீமனிடம் உணவு கொண்டுவரக் கூறினார். எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை. சோர்வடைந்த பீமன், சிவலிங்கம் ஒன்றைக் கண்டான். சுவாமியிடம் உணவளிக்க வேண்டினான். பீமனுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் பால் கிடைக்க சுவாமி அருள்பாலித்தார். தங்களுக்கு உணவு அளித்தது போல், அவரை வழிபடும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று பாண்டவர்கள் வரம் கேட்டனர். சுவாமியும் அருள் பாலித்தார். பீமனின் பெயரால் இவர்பீமேஸ்வரர் எனப்பட்டார். இவரை வழிபடுபவர்களுக்கு உணவு  பஞ்சமே வராது என்பது நம்பிக்கை. ஏகாதச ருத்ரர்களில் ஒருவரான பீமனும், திருக்கயிலாயத்தில் நிருதி (தென் மேற்கு) திசையின் காவலனாக விளங்கக் கூடிய பீமநாதனும் வணங்கியதாலும் இறைவனுக்கு பீமேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. பீமனின் பசிக்கு பால் அளித்ததால் அம்பாள் பாலாம்பிகை எனப்பட்டாள். பாண்டவர்கள் வனவாசம் வந்த மின்னூர் காட்டுப்பகுதியே இப்போது திண்டிவனம் எனப்படுகிறது.-  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சதுரமான கருவறையின் நடுவில் 6 அடி உயரத்தில் மூலவர் பீமேஸ்வரர் பிரம்மாண்டமாக மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது சிறப்பானதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar