காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில்
அரியலூர்.
பொது தகவல்:
கோஷ்டங்களில் தும்பிக்கையான் முதலிருக்க, தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், துர்க்கை , விஸ்வநாதர் , விசாலாட்சி, நவகோள்கள், பைரவர் சன்னதிகளும் இருக்கின்றன. செவ்வாய், வெள்ளிகளில் சிறப்பு பூஜை கண்டு பயன் தரும் கல்யாணதுர்க்கை தனி சன்னதியில் தரிசனம் அளிக்கிறாள். பாலமுருகனின் திருவிளையாடல் பல, ஓவியங்களாக சுவரை அலங்கரித்து, மனதை அபகரிக்கின்றன.
பிரார்த்தனை
செல்வம் பெருகவும், புத்திரபேறு கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
மூன்று நிலை ராஜகோபுரம் பாலசுப்ரமணியன் பெயரும், அவன் அண்ணனின் உருவும் தாங்கி முன் நிற்கிறது. முன்வாசல் எதிரே நின்றாலே மூலவராக காட்சிதரும் முருகனின் தரிசனம் முழுமையாகக் கிடைக்கிறது. தரிசிக்கும்போது, வேல்தாங்கி நின்று வேதனை துடைத்திட நான் இருக்க உனக்கேன் பயன்? என்று உமைபாலன் கேட்பதுபோல் தோன்ற, உள்ளம் நெகிழ்கிறது. பக்தி அதிர்வுகள் கோயிலில் நிரம்பி இருப்பதை வலம்வரும் போது உணரமுடிகிறது.
தல வரலாறு:
யாழ்பாணத்தில் இருந்து இந்தியா வந்த ஏழு சித்தர்களுள் சிற்றம்பல அப்பார் என்பவர் இத்தலத்தில் தங்கி சிவமைந்தனை பூஜித்திருக்கிறார். சித்தத்தை ஒருநிலைப்படுத்தி சிவபாலனைத் துதித்து அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்ற அந்த சித்தர், ஆறுமுகனின் அருளாற்றலை முழுமையாக ஓரிடத்தில் குவித்து அந்த இடத்தில் சிலை ஒன்றினை ஸ்தாபித்து மற்றவர்களுக்கும் அவனருள் சத்திக்கும்படி செய்திருக்கிறார். அவரது ஜீவ சமாதி இங்கே இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபாலன்
இருப்பிடம் : அரியலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், அரசு மருத்துவமனை சாலை அருகே பெரிய கடைவீதியில் அமைந்திருக்கிறது பாலசுப்ரமணியன் ஆலயம்.