இங்கே தன் பத்து அவதாரங்களையும் ஒருசேர மண்டபத் தூண்களில், தசாவதாரச் சிற்பங்கள் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி 11 முதல் மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்
அரியலூர்.
போன்:
+91 99435 30122, 90479 12201.
பொது தகவல்:
முகப்பு கடந்ததும் பலிபீடம், கொடிமரம் தரிசித்து ராமநாமத்தின் பெருமைபோல கம்பீரமாக நிற்கும் ஐந்துநிலை கோபுரத்தின் வழியே சென்று கருடனை வணங்கி முன் மண்டபத்தினுள் நுழைந்தால் மண்டபத் தூண்களில் தசாவதாரக் சிற்பங்கள், கோதண்டராமர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி மூலவரையும் உற்சவரையும் தரிசிக்கும்போது மனம் நிறைகிறது. அலமேலு மங்கைத் தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கோயிலின் பெயருக்குக் காரணமான கோதண்டராமர், இனியவளும் இளையவனும் உடனிருக்க அனுமன் திருப்பாதம் பணிய எழிலாகத் தோற்றமளிக்கிறார், மலர் மகளுக்கு மட்டும்தான் ராமாவதாரத்தில் இடம் உண்டு என்றாலும் இங்கே பூமகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே உள்ள ராம விக்ரகம் பூமித்தாயால் சுமந்து தரப்பட்டது என்பதுதான் அது. ஆமாம் பூமியில் இருந்து புதையலாகக் கிடைத்தவை இங்கிருக்கும் சீதா, ராம, லட்சுமணர் மூர்த்தங்கள். ஆண்டாள், ஆழ்வாராதிகள், தும்பிக்கை ஆழ்வார், ருக்மணி, சத்யபாமா சமேதராக தனிச் சன்னதியில் அருளும் கிருஷ்ணர், அனுமன் சன்னதிகளும் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணத் தடை நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் திருமஞ்சனம் செய்தும், துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
தலம் எதுவானாலும் ராமபிரான் தன்னிகரற்ற தெய்வமாகவே திகழ்வார் என்பதே உண்மை. என்றாலும் காலத்தாலும் புராணக் காரணத்தாலும் ஒவ்வொரு தலமும் தனிச்சிறப்பு பெறும். அந்த வகையில் இந்தத் திருத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் அரி இல் ஊர். அதாவது அரியாகிய மகாவிஷ்ணுவின் இருப்பிடம் என்பது தான் இந்த ஊரின் பெயருக்குக் காரணம் என்கிறார். தமிழ்த்தாத்தா உவே சாமிநாதய்யர். அவருக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்? அவர் சிறு வயதில் வாழ்ந்ததும் தமிழ் கற்றதும் அதில் ஆர்வம் பெற்றதும் இந்த ஊரில் தானாம். தமிழ்த்தாத்தா வருகைக்கு முன்பே, தமிழ் விளையாடிய கோயில் இது என்று சொல்லலாம். காரணம், பல்லவ மன்னர்களால் கி.பி ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் இது. ஆறாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொன்னாலும் அதற்கு முன்பே திருமால் இங்கே எழுந்தருளி இருக்கவேண்டும் என்கிறார்கள். அதற்குச் சான்றாக
பாற்கடல் வாசனான இறைவன் இங்கே வந்த காலத்தில் இங்கும் கடல் இருந்ததாகச் சொல்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள். கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்து தோன்றிய பூமியே அரியலூர். தொல்லியலாளர்கள் கடலடியில் உள்ள உயிர்களின் படிமங்களை இந்த ஊரில் பல இடங்களில் அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். இன்றும் கிடைக்கின்றனவாம். கடல் கொண்ட ஊர் பூம்புகார். கடல்தந்த ஊர் அரியலூர் கடல் என்றாலே அது திருமாலின் வீடுதானே..! என்று இவ்வூரைப் போற்றியிருக்கிறார் கிருபானந்த வாரியார். இங்கே தன் பத்து அவதாரங்களையும் ஒருசேர மண்டபத் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் அமைந்துள்ளது. . சிற்பங்கள் என்று நினைக்கவே இயலாதபடி ஒவ்வொன்றும் நிஜமாகவே எதிரில் இருப்பது போல் தோன்றுகின்றன. அதிலும் தூணில் இருந்தே தோன்றிய நரசிம்மரின் வடிவம்.... பயத்தோடு பக்தியையும் ஒருசேர ஏற்படுத்தும் அம்பரீஷி எனும் பெயருடைய மன்னன் ஒருவன் பெருமாளின் தசாவதாரங்களையும் ஒருசேர தரிசிக்க ஆசைப்பட்டான். அவனுக்கு எம்பெருமான் காட்சியருளிய தலம் இது. இன்றும் பறவை வடிவில் இவ்வாலய கோபுரத்தில் அமர்ந்து தேவாதி தேவனை தரிசித்து மகிழ்கிறானாம் அந்த அரசன். அதனை விளக்கும் விதமாக மண்டபத்தின் எதிர்ப்புறம் கோபுரத்தின் உள்வாயிலின் மேல் பறவை ஒன்றின் சிலையை வடித்து வைத்திருக்கிறார்கள்.
பல்லவர் கால பாணியில் அமைந்த சிங்கமுகத் தூண்கள் இங்கே இருப்பது கோயிலின் காலத்தினை உணர்த்துகிறது. தேர்போன்ற அமைப்பில் இரு குதிரைகள் இழுப்பது போன்ற கருவறை மண்டப அமைப்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தின் திருக்கோயில் திருத்தி அமைத்து திருப்பணி செய்யப்பட்டிருப்பதை சொல்லாமல் சொல்கிறது, கோயில் பிற்காலத்தில் ஜமீன்தாரர்களாலும் பராமரிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:
பல்லவ மன்னன் ஒருவன் தன் பெற்ற வெற்றிகளால் இறுமாப்புடன் இருந்தான். ஒருவர் போரினால் பெற்ற வெற்றிக்குப் பின், எவ்வளவு துயரங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை அவனுக்கு எடுத்துச் சொன்னார். களத்தில் ஜெயித்த அவனுக்கு களங்கமும் சேர்ந்திருப்பதை உணர்த்தினார். உண்மை உணர்ந்த மன்னன், தன் பாவங்கள் தீர வழிகாட்ட வேண்டினான். கோதிலா குணத்துடன் வாழ்ந்து காட்டிய ராமபிரானை வணங்கச் சொன்னார் முதியவர். அப்படியே செய்தான், மன்னன். அதற்காக அவன் கட்டியதே இந்தத் திருக்கோயில் என்கிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கே தன் பத்து அவதாரங்களையும் ஒருசேர மண்டபத் தூண்களில், தசாவதாரச் சிற்பங்கள் அமைந்துள்ளது.