சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீப உற்சவம், நவராத்திரி உற்சவம், மாசிமக தீர்த்தவாரி உற்சவம். பவுர்ணமி சிறப்பாக கொண்டாடப்படும், இரவு 12:00 மணிக்கு சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடப்பது வழக்கம். பவுர்ணமி தீபம் ஏற்றி, கோயிலை அம்மனுடன் வலம் வந்து கோயிலின் மேல்மாடத்தில், தீபம் ஏற்றப்படும்.
தல சிறப்பு:
வடக்கு திசையை நோக்கி, குபேர மூலையில் அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கெடிலம் ஆற்றங்கரையின் கிழக்கே உள்ள, இக்கோயிலில், செல்வ விநாயகர், கெஜலட்சுமி, பாலமுருகன், வீரபத்திரன், வக்ர காளியம்மன், நாகக்கன்னி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோயிலின் வெளியே எல்லைசாமி சன்னதி அமைந்துள்ளது.
பிரார்த்தனை
சகல தோஷங்களும் நிறைவேற பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தேன் அபிஷேகம், பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்தும், எலுமிச்சை பழம் மாலை, சிவப்பு வஸ்திரம், சிவப்பு அரளி பூ மாலை அணிவித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
மற்ற கோயில்களில் காளியம்மன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கும். ஆனால், இங்கு அம்மன் சாந்தமான நிலையில் அருள்பாலிக்கிறார். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
தல வரலாறு:
முந்தைய காலத்தில் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, ஊருக்குள் புக நேர்ந்தது. அப்போது, அம்மன் தரைப் பகுதியை காத்து, வெள்ளம் வராமல் தடுத்ததால், தரைகாத்த காளியம்மன் என்ற பெயரில் பக்தர்கள் அழைக்கத் துவங்கினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வடக்கு திசையை நோக்கி, குபேர மூலையில் அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.