Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வெண்ணுமலையப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வெண்ணுமலையப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெண்ணுமலையப்பர்
  உற்சவர்: வெண்ணுமலையப்பர்
  அம்மன்/தாயார்: பூரணி, பொற்கலை
  தல விருட்சம்: வன்னி மரம்
  தீர்த்தம்: தீர்த்தகுளம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: பெரியகண்டியங்குப்பம்
  ஊர்: பெரியகண்டியங்குப்பம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் 10 நாள் உற்சவம், சித்திரை வருடப்பிறப்பு,  
     
 தல சிறப்பு:
     
  விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 மாலை 3 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வெண்ணுமலையப்பர் திருக்கோவில், பெரியகண்டியங்குப்பம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 9486881433 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், ஆதி அய்யனார், கருப்பசாமி, சுந்தரமூர்த்தி அய்யனார், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்கவும், நோய்கள் குணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும், திருடு போன பொருள்கள் மீண்டும் கிடைக்கவும் பிரார்த்தினை செய்யப்படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  கிடா வெட்டி பூஜை, வீரனாருக்கு பிராது கட்டும் முறை. 
    
  தல வரலாறு:
     
  சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்து திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வழியாக திருநாவலூர் சென்றார். அப்போது விருத்தகிரீஸ்வரர் அவரை அழைத்து, தன்னை பற்றி பாடல் பாடுமாறு கூறினார். அதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் மறுத்துவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தார். பின்னர் விருத்தகிரீஸ்வரர் தனது காவலாளிகளை விட்டு, சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வரச்செல்லி மீண்டும் தன்னை பற்றி பாடல் பாடும்படி கூறுகிறார். அப்போதும் சுந்தரமூர்த்தி நாயனார் மறுத்துவிட்டுச் சென்றார். இதனால், ஆத்திரமான விருத்தகிரீஸ்வரர், இவ்வழியாக மீண்டும் சுந்தரமூர்த்தி நாயானார் வரக்கூடாது என்பதற்காக, வடக்கு எல்லையான பெரிய கண்டியங்குப்பத்தில் வெண்ணு மலையப்பரை, காவலுக்கு  நியமித்தார் என்பது இக்கோவிலின் ஐதீகம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar