ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் கொலு உற்சவம், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக ஆண்டு பூஜை.
தல சிறப்பு:
அம்மன் தெற்கு நோக்கிய நிலையில், சாந்த முகமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு படவட்டம்மன் திருக்கோயில்
படவட்டம்மன் கோவில் தெரு
புதுப்பாளையம்-607001
கடலூர்.
போன்:
+91 9787809414
பொது தகவல்:
கோவில் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. மூலவர் விமானம் தனியாக உள்ளது.
பிரார்த்தனை
திருமணத் தடை, குழந்தை பாக்கியம் என, சகல தோஷங்களும் நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது, லட்சார்ச்சனை, மற்றும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோவிலுக்குள் நுழைந்ததும் சிம்மவாகனம், பலி பீடம் வரவேற்கின்றன. கோவில் வளாகத்தில், பாலவிநாயகர், பால முருகன், நாகராஜன் சிலைகள் உள்ளன.
தல வரலாறு:
கடலூர் கெடிலம் ஆற்றில் 300 ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, மரத்தினால் செய்யப்பட்ட அம்மன் சிலை, பம்பை, உடுக்கை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, புதுப்பாளையம் பகுதியில் கரை ஒதுங்கியது. அம்மன் சிலை கரை ஒதுங்கிய இடத்தில், கீற்று கொட்டகை அமைத்து பக்தர்கள் வழிபடத் துவங்கினர். அன்றை தினம் முதல், கோவில் அமைந்துள்ள உள்ள பகுதி, படவட்டம்மன் கோவில் தெரு என்றே அழைக்கப்படத் துவங்கியது. வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரத்திலான அம்மன் சிலையை, மெருகேற்றி பாதுகாக்கப்பட்டு, விசேஷ காலங்களில் உற்சவராக வீதியுலா நடக்கிறது. இரவு நேரங்களில் அம்மன் குழந்தை வடிவில் உலா வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அம்மன் தெற்கு நோக்கிய நிலையில், சாந்த முகமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.