சித்திரை பவுர்ணமி தினத்தன்று மூன்று நாட்கள் திருவிழா நடத்தப்படும். முதல் நாள் விழாவில், காலையில் நதிக்கரைக்கு சென்று கரகம் அழைத்து வருதலும், மாலை ஊரின் எல்லையில் இருந்து அம்மன் தனது தங்கை பூவாத்தாவை வெள்ளைக் குதிரையில் அழைத்து வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தல சிறப்பு:
அமாவாசை தினத்தன்று நடக்கும் சிறப்பு பூஜையின் போது சூரிய ஒளியும், பவுர்ணமி தினத்தன்று நடக்கும் சிறப்பு பூஜையின் போது, சந்திரன் ஒளியும் மூலவர் மீது விழும் நிகழ்வு நடந்து வருகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் வளாகத்தில் வீரன், தட்சணாமூர்த்தி, துர்கை, நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
திருமணத் தடை, குழந்தை பாக்கியம் என, சகல தோஷங்களும் நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், நேர்த்திக்கடனாக பொங்கல் வைப்பது, மாவிளக்கு மாவு, கடலை வைத்து படையலிடுவது.
தலபெருமை:
கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூஜை முடிந்ததும், மூலவர் சன்னதி எதிரில் கோயில் வெளியே நன்றாக படர்ந்திருந்த வேப்பமரம் பட்டு போனது. பின்னர், அதே இடத்தில் வேப்பம் மற்றும் அரச மரங்கள் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அம்மன் 8 கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தி, வடக்கு திசை நோக்கி சற்று சாய்ந்த நிலையில், சாந்த முகமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.
தல வரலாறு:
புதுச்சேரி மாநிலம், பாகூரை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பராந்தக சோழன் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அப்போது, கீழ்பரிக்கல்பட்டு என்ற இடத்தில் திறந்த வெளியாக காட்சியளித்த பூண்டியம்மன் கோயிலை கிராம மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டனர். பாகூரில் உள்ள, மூலநாதர் கோயிலை போன்றே பூண்டியம்மன் கோயிலையும் புதிதாக கட்ட பராந்தக சோழ மன்னர் முடிவு செய்தார். இதற்காக, சுவாமியிடம் அருள்வாக்கு கேட்கப்பட்டது. கோயிலை புதிதாக கட்ட வேண்டுமானால் மூலவர் கோபுரத்தின் நிழல் கடலில் தெரிய வேண்டும்; மூலவர் சன்னதி கதவு திறக்கப்படும் சப்தம் காஞ்சிபுரத்திலும், கோயில் மணியின் ஓசை மாயவரத்திற்கும் கேட்க வேண்டும்; அப்போது தான் கோயிலை கட்ட வேண்டும்; இல்லையென்றால் கட்டக் கூடாது என, சுவாமி அருள்வாக்கு கூறியதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதையடுத்து கோயில் கட்டும் முடிவை மன்னர் கைவிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி மக்கள் ஒன்று கூடி, கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, பெரியவர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டனர். தற்போது, கலியுகம் நடந்து வருவதால் கடல் ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பஞ்சபூதங்கள் எனப்படும் காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், பூமி ஆகியவற்றில் இருந்து பக்தர்களை அம்மன் பாதுகாக்கும் விதமாக, கருவறையானது கோபுரம் இன்றி திறந்தவெளியாக இருக்கும்படி கோயில் அமைக்க வேண்டுமென அவர், கூறினார். அதன்படியே கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அமாவாசை தினத்தன்று நடக்கும் சிறப்பு பூஜையின் போது சூரிய ஒளியும், பவுர்ணமி தினத்தன்று நடக்கும் சிறப்பு பூஜையின் போது, சந்திரன் ஒளியும் மூலவர் மீது விழும் நிகழ்வு நடந்து வருகிறது.
இருப்பிடம் : புதுச்சேரியில் இருந்து கடலுõர் கிழக்கு கடற்கரை சாலையில் 24 கி.மீ. துõரத்திலும், கடலுõரிலிருந்து புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக 17 கி.மீ. துõரத்திலும் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
புதுச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
பைவ் ஸ்டார் ரிசோர்ட்ஸ் இந்தியா கன்னியக்கோவில், முள்ளோடை, புதுச்சேரி மாநிலம் போன்: 0413-2611371