கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது. அப்பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழ இணைவேந்தர் பெயரில் நகர் அமைத்தமையால் முத்தையா நகர் என அழைக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாத விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
சித்திரை 1–10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு செல்வ முத்துவிநாயகர் திருக்கோயில்,
அண்ணாமலை நகர் அஞ்சல்,
சிதம்பரம் வட்டம்,
கடலூர்-608 002.
போன்:
+91 94435 38084, 78715 65728
பொது தகவல்:
கிழக்குப்பக்கம் நுழைவு வாயில், நுழைவு வாயில் இடபக்கம் தீர்த்த கிணறு மற்றும் தலவிருட்சமான வன்னிமரம் மற்றும் வெள்ளெருக்கு உள்ளது. கோயில் வலபக்கம் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகால ட் சுமி தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். விமானத்தில் ஒரு கலசம் இடம் பெற்றுள்ளது. கிரானைட்டில் தரை அமைக்கப்பட்டுள்ளதுடன், 75 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கருவறையில் செல்வ முத்து விநாயகர் அருள்பாலிக்கிறார். கோயிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் மற்றும் மகாலட்சுமி சிலைகளும் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
கல்வி, மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விநாயகர் அருள்பாலிப்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
நெய் தீபம் ஏற்றி, எருக்கு மாலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கேயில் அருகில் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.2 010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கோயில் புதுப்பிக்கப்பட்டு நடந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாகும்.
தல வரலாறு:
சிதம்பரத்தில் இருந்து இரண்டு கி.மீ.,தொலைவில் உள்ளது கொத்தங்குடி கிராமம். இப்பகுதியில் இருந்த நஞ்சை நிலத்தில் இ டம் வாங்கி அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தார் முத்தையா செட்டியார் பெயரில் நகர் அமைத்தனர். துவக்கத்தில் 25 குடும்பங்கள் மட்டும் வசித்தனர். 1995 ஆம் ஆண்டு கல்வி கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஊழியர்கள் சேர்ந்து ஊரும் பேரும் இல்லாததது பரம்பொருள், எங்கும் வியாபித்திருப்பது. சாதாராண மனிதருக்கு எளிதில் அறிந்து கொண்டு வழிபட இயலாத படி உள்ளது.
அத்தகைய பரம்பொருளுக்கு ஊரையும் பெயரையும் சூட்டி ஓரிடத்தில் திரட்டி தங்கள் உணர்வுகளை மனமுருகி சொல்ல ஏதுவான இடமாக நிறுவியதே கோயில். செல்வங்களையும், வளங்களையும், கல்வியையும் வழங்கும் முதற் கடவுளான விநாயகரை வணங்க திட்டமிட்டு யோசித்ததின் விளைவால் இக்கோயில் உருவாகியது. அதற்கு செல்வமுத்து விநாயகர் என்ற பெயர் சூட்டினர். உள்ளங்கனிந்து உருகி வழிபடுவோரின் வேண்டுதல்களை கருணையோடு நிறைவேற்றி வருகிறார். கமிட்டித் தலைவர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர். 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சித்திரை 1–10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.