மாசி மகம், சித்திரா பவுர்ணமி, ஆடிகடைசி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய தினங்களாக கொண்டாடுகின்றன.
தல சிறப்பு:
தல விருட்சமாக உள்ள புளியமரம் இன்றளவும் பிஞ்சு, காய் ரத்தமாக இருப்பதுடன், மரத்தை காயப்படுத்தினால் ரத்தமாக தண்ணீர் வெளி வருகிறது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்,
நஞ்சை மகத்து வாழ்கை மற்றும் அஞ்சல்,
சிதம்பரம் வட்டம்,
கடலூர்- 608102.
பொது தகவல்:
கிழக்குப் பக்கம் வாயில், விமானத்தில் ஒரு கலசம், நவக்கிரகம் அருகில் தீர்த்தக்கிணறு உள்ளது. நுழைவு வாயில் முன் உள்ள மண்டபத்தில் 200 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கோயிலுக்குள் இடபக்கம் முருகன், வலப்பக்கம் விநாயகர் சிலைகள் உள்ளது.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக திகழ்வதால் பக்தர்கள் இங்கு அதிகமானோர் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
தலபெருமை:
குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக ஸ்ரீ முஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமைச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
தல வரலாறு:
விவசாயத்தை பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்கிய காளியம்மன், விவசாயி கனவில் தோன்றி, தான் இங்கு உள்ள புளியமரத்தில் குடி கொண்டுள்ளதாகவும், கோயில் கட்ட சொல்லியுள்ளார். அப்பகுதியினர் மறுத்து, புளிய மரத்தை வெட்டிய போது மரத்தில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதன்பின் மரத்தை எடுத்துச் சென்று ஒரு இடத்தில் அடுக்கினர். அப்போது அந்த மரம் தளிர் விட்டு மரமாகியது. அதன் பின் அப்பகுதியினர் அச்சமடைந்து படையல் நடத்தினர். அப்போது ஒருபெண் மூலம் அருள் வாக்காக காளியம்மன் தோன்றி தான் விவசாயத்தை பாதுகாப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி, விழா நடத்தினால் நோய் நொடிகளை தீர்த்து, சுகம் அளிப்பதுடன், திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியம் அளிப்பதாக கூறி மறைந்துள்ளார். அதன் பின் அப்பகுதியினர் வரி வசூல் செய்து கோயில் கட்டி பராமரித்து வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தல விருட்சமாக உள்ள புளியமரம் இன்றளவும் பிஞ்சு, காய் ரத்தமாக இருப்பதுடன், மரத்தை காயப்படுத்தினால் ரத்தமாக தண்ணீர் வெளி வருகிறது.