அருள்மிகு திருசக்தி மகா மாரியம்மன், ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்
மூலவர்
:
திருசக்தி மகா மாரியம்மன், ரேணுகா பரமேஸ்வரியம்மன்
உற்சவர்
:
திருசக்தி மகா மாரியம்மன், ரேணுகா பரமேஸ்வரியம்மன்
அம்மன்/தாயார்
:
திருசக்தி மகா மாரியம்மன், ரேணுகா பரமேஸ்வரியம்மன்
தல விருட்சம்
:
வேம்பு, அரசன்
ஆகமம்/பூஜை
:
சிவ ஆகமம் மூன்று கால பூஜை
புராண பெயர்
:
கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது. கருவை முட்புதற்கள் மண்டிய இடத்தில் அப்குதியினர்கள் வீடு கட்டிகுடியேறியதால் கொத்தங்குடி தோப்பு என்றாகியது.
ஆனி மாதம் கடைசி வெள்ளி கொடி ஏற்றம், ஆடி முதல் வெள்ளி கஞ்சி வார்த்தல், 11 ம் தீமிதி உற்சவம், கும்ப பூஜை, 13 ம் நாள் ஊஞ்சல் உற்சவம், ஆடி மற்றும் தை கடைசி வெள்ளி திருவிளக்குப் பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருசக்தி மகா மாரியம்மன், ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்,
அண்ணாமலை நகர் அஞ்சல்,
சிதம்பரம் வட்டம்,
கொத்தங்குடிதோப்பு,
கடலூர்-608002.
போன்:
+91 - 9629879958
பொது தகவல்:
கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில் முன் உள்ள மண்டபம் மூன்று பக்கம் சுவர் இல்லாமல் உள்ளது. கோயில் பின் பக்கம் பரந்து விரந்த இடம் தல விருட்சம் கோயில் பின் பக்கம் தெற்கு பக்கம் பார்த்த வகையில் தட்சிணாமூர்த்தியும், கிழக்குப் பக்கம் பார்த்த நோக்கில் நாகர், ஐயனார் மற்றும் லிங்கோத்பவர் மேற்கு பார்த்து ஆஞ்சநேயர் இட கையில் சுக்குமாந்தடியும், வலது கையால் ஆசிர்வதித்தும் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பார்த்து எருமை தலையில் நின்ற நோக்கில் எட்டு கரங்களுடன் துர்கையும், பாவாடைராயன் சுமார் 15 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றார். கோயில் உள்பிரகாரத்தில் மூலரான அம்மனும், உற்சவரான திருசக்தி அம்மனும் சிரித்த கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். உற்சவர் தவிர்த்து அனைத்து சுவாமிகளும் சுதையால் வடிவமைக்கப்பட்டது.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, பக்தர்களின் கோரிக்கைகள் தீர்க்கும் திருசக்தி, தீராத நோய்களுக்கு சிறந்த தலமாதலால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுதை சிற்பங்கள், ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் உள்ளதால் பெருமைமிக்கதாக அமைந்துள்ளது. இக்கோயிலில் 2007மற்றும் 2012இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
தல வரலாறு:
காடு, மேடு, கரடு, முரடான பகுதியில் முதல் முதலில் 50 குடும்பங்கள் குடிசை வீட்டில் வசித்தனர். அப்பகுதி மக்கள் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மனை வணங்கி வந்தனர். அப்பகுதியில் திடீரென வயிற்றுப் போக்கு மற்றும் காலரா நோய் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அம்மனிடம் வேண்டுதல் செய்தனர். அதன் கீழத்தெருமாரியம்மன் கோயிலில் இருந்து கலசம் எடுத்து வந்து தற்போது கோயில் உள்ள இடத்தில் வைத்துவழிபாடு நடத்தினர். அதன் பின் அப்பகுதியில் அம்மன் காவல் தெய்வமாக விளங்கியதுடன், பக்தர்கள் வேண்டியது நிறைவேறியது. அதன் பின் அப்பகுதியினர் வரிவசூல் செய்து கோயில் கட்டினர்.
கோயில் கட்டிய பின் அப்பகுதியில் இருந்த அனைத்து வீடுகளும் மாடி வீடுகளாக அமைந்துள்ளது. செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணமாகி வெளியூர், வெளிநாட்டில் இருந்தாலும் திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் இது வரை எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை இதற்கு அம்மன் தான் காரணம், அம்மன் இரவு நேரத்தில் நகரை சுற்றி வந்து காவல் பார்த்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். பக்தர் வேண்டுதல் உடன் நிறைவேற்றாவிட்டால் அவரது கனவில் தோன்றி இவற்றை செய் என உத்தரவிடுவதாவும் பக்கதர்கள் கூறுகின்றனர். அதிகளவில் உற்ற பிற தெய்வங்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அப்பகுதி ஊராட்சித் தலைவர் சொந்த செலவில் முகப்பு மண்டபம் கட்டியுள்ளார்.