Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கல்யாண வெங்கடேசப் பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  ஊர்: தென்னம்பாக்கம்
  மாவட்டம்: புதுச்சேரி
  மாநிலம்: புதுச்சேரி
 
 திருவிழா:
     
  கல்யாண மகோத்ஸவம்: ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இதில் பங்கேற்றால், கிரக தோஷம் நீங்குவதோடு விரைவில் திருமணம் கைகூடும். திருவோண நட்சத்திரத்தன்று திருமஞ்சன (அபிஷேகம்) சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருமணம், குழந்தைப்பேறு தடை நீங்க இதில் பங்கேற்கலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், தென்னம்பாக்கம், புதுச்சேரி.  
   
போன்:
   
  +91 97894 42808, 84894 16530, 89393 19214 
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, கிரக தோஷம், குழந்தைப்பேறு, நோய்கள் நீங்கி உடல்நலம் பெற இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  நோய்கள் நீங்கி உடல்நலம் பெற சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திரத்தன்றும், யோக நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்றும் பூஜை செய்கின்றனர். இங்குள்ள காரிய சித்தி அனுமனுக்கு சனிக்கிழமையில் துளசி மாலை சாத்தி வழிபட நினைத்தது நிறைவேறும். 
    
  தல வரலாறு:
     
  சைவத் திருத்தலங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு திருமணஞ்சேரி உள்ளது போல, வைணவனத் திருத்தலங்களில் புதுச்சேரி அருகிலுள்ள தென்னம்பாக்கம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. திருமூலர் நாடி, பிருகுநாடி, அகத்தியர்நாடி, வசிஷ்டர் நாடி ஆகிய நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளில், “கலியுகத்தில்  ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன்  கல்யாண வெங்கடேசப் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளுவார்,” என்று மகரிஷிகளின் வாக்காக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இங்கு கோயில் அமைக்கப்பட்டது. ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளால் மங்களாசாசனம் செய்த பெருமை கொண்டது இத்தலம். கோவிந்த உபாசகர் சீதாராம சுவாமி 1996ல்  சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) செய்து வைத்தார்.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar