மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், மயான கொள்ளை, மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்.
தல சிறப்பு:
கோவிலில் மூலவராக கிழக்கு நோக்கி அங்காளபரமேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கிறார். பக்கத்தில் தனிசன்னதியில் வடக்குநோக்கி பெரியாயி சுயம்புவாக உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல்12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி:
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்
தினசரி காய்கறி மார்க்கெட் பக்கத்தில்,
காட்டுக்கூடலுார் சாலை
விருத்தாசலம், 606 001
கடலுார் மாவட்டம்.
போன்:
+91 9786729661, 9842309252
பொது தகவல்:
கோவிலில் மூலவராக கிழக்கு நோக்கி அங்காளபரமேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கிறார். பக்கத்தில் தனிசன்னதியில் வடக்குநோக்கி பெரியாயி சுயம்புவாக உள்ளார். தெற்கு புறத்தில் அம்மன் உற்சவ மண்டபம் அமைந்துள்ளது; அருகில் தலவிருட்சமாக வன்னிமரம் உள்ளது. மேலும் கோவிலில் வேம்பு, அரசன் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகில் சித்திவிநாயகர் தனி சன்னதி உள்ளது. மேலும், அரியநாச்சி உடனுறை பாவாடைராயன் சன்னதி உள்ளது. அம்மனுக்கு எதிரில் மேற்கு நோக்கி திரிசூலத்துடன், நந்தீஸ்வரர் உள்ளார்.
பிரார்த்தனை
திருமணம், குழந்தைபேரின்மை
நேர்த்திக்கடன்:
பால்குடம், செடல், தீச்சட்டி எடுத்தல்
தல வரலாறு:
நுாறாண்டுகளுக்கு மேலாக சுயம்புவாக ஏற்பட்ட பெரியாயி அம்மனை வழிபட்ட மக்கள் அங்காளபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். பின்னர், பெரியாயி, அங்காளபரமேஸ்வரிக்கு சன்னதி அமைத்து, விநாயகர், பெரியகருப்பன், பாவாடைராயர் ஆகிய சுவாமிகளை பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வருகின்றனர். அங்காளபரமேஸ்வரியை குலதெய்வமாக கொண்ட விருத்தாசலம், சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாசிமாத உற்சவம் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோவிலில் மூலவராக கிழக்கு நோக்கி அங்காளபரமேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கிறார். பக்கத்தில் தனிசன்னதியில் வடக்குநோக்கி பெரியாயி சுயம்புவாக உள்ளார்.
இருப்பிடம் : விருத்தாசலம் – காட்டுக்கூடலுார் சாலை, தினசரி காய்கறி மார்க்கெட் பக்கத்தில் அமைந்துள்ளது. பண்ருட்டியிலிருந்து காட்டுக்கூடலுார் வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் கோவிலில் நின்று செல்லும். விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து முதனை, பெரியார், வடலுார் செல்லும் பஸ்களில் ஸ்டேட் பேங்க் நிறுத்தத்தில் இறங்கி செல்லலாம்.