Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: உத்திராபதி பசுபதியார்
  உற்சவர்: சீராளன்
  அம்மன்/தாயார்: மாரியம்மன்
  தல விருட்சம்: வில்வம், வேம்பு
  தீர்த்தம்: புஷ்கரணி
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: பிச்சாவரம் ஜமின் உறவினர்களை காணவந்த ராதா–ருக்மணி நீண்ட காலம் குடியிருந்ததால் இந்த இடத்திற்கு ராதா வாளகம் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் ராதாவிளாகம் என மறுவியுள்ளது.
  ஊர்: ராதா விளாகம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, வினாயகர் சதுர்த்தி, ஏப்ரல் மாதம் பரணி நட்சத்திரத்தில் அமுது படையல் அதன் 21 ம் நாள் வீதியுலா, ஐப்பசி மாதம் அன்னாபிேஷகம், பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நவராத்திரி உள்ளிட்டவை  
     
 தல சிறப்பு:
     
  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காலை நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுதல்  
     
திறக்கும் நேரம்:
    
 காலை முதல் 5.30 மணி முதல் பகல் 10.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு உத்திராபதி பசுபதியார் கோயில் ராதாவிளாகம், உத்தமசோழமங்கலம் அஞ்சல், அண்ணாமலை நகர் வழி, சிதம்பரம் வட்டம் 608 002  
   
போன்:
   
  +91 9585180237 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப் பக்கம் நுழைவு வாயில் கருவறையின் உச்சியில் ஒரு கலசம் உள்ளது. ஈசான மூலையில் கோவில் மணி மகா மண்டபத்தில் 50 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். பலி பீடம், ஆங்கார நந்தி ஈசனை வணங்கிய நிலையில்படுத் துள்ளது. பலி பீடம் மற்றும் நந்திக்கு அருகிலே தீபம் ஏற்றப்படுகிறது.

அர்த்த மண்படத்தில் இடது பக்கம் பால வினாயகர், வலபக்கம் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். துவார சக்திகள் பக்தர்களை வரவேற்று அருள் பாலிப்பது போல் காட்சியுள்ளது. அருகில் ஸ்ரீமாரியம்மன் ஒரு கலசத்துடன் கூடிய தனி சந்நதியில் கருவறையில் சிரித்த கோலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார் இதனால் எந்த வேலைகளை துவங்கும் முன் இவரை வணங்கி விட்டு துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  

கோவில் நுழைவு வாயில் தெற்கு முகம் பார்த்துள் ளதுடன், மகா மண்டபத்தில் ஈசான மூலையில் கோவில் மணி வலது பக்கம்பால முருகன், இடபக்கம் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். கோவில் பின் பக்கம் தல விருட்ச மரங்களான வேம்பும், வில்வமும் இரு கண்கள் போல் உள்ளது. அருகில் சப்த கண்ணிகள் பக்தர்களை வரவேற்கும் விதமாக அருள் பாலிக்கின்றனர்.  இரு கோவில்களிலும் தரை தளம் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விளங்குகின்றார். 
    
நேர்த்திக்கடன்:
    
  நெய் தீபம், பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப., 
    
 தலபெருமை:
     
  சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோவில், ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி ஆலயத்தால் இக்கோவிலுக்கு பெருமையாக உள்ளது. 
 
     
  தல வரலாறு:
     
  பிச்சாவரம் ஜமீன் பரம்பரை உறவினர்கள் இங்குள்ள கருவை முட்புதற்கள் சூழ்ந்த வனப்பகுதியில் வசித்தனர். அவர்களை காண ராதா ருக்மணி வந்தனர். அங்கு நீண்ட காலங்கள் வசித்து வந்ததால் ராதா வளாகம் என்று அழைக்கப்பட்டு தற்போது ராதா விளாகமாக மறுவியுள்ள இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த கோவிந்தராஜ் செட்டியார் பட்டத்துடன் கூடியவர் மண் பாண்டம் செய்யும் தொழில் செய்துவந்துள்ளார்.

 இவரும், இவருடைய மனைவியும் சிவ பக்தர்களாக வசித்தனர். அவர்களின் கனவில் தோன்றிய சிவன் தனக்கு கோவில் கட்டி வழிபாடு செய்தால் சகல செல்வங்களையும் வழங்கும் நிலை ஏற்படும் என மாறு கூறி சிறிய கல் ஒன்றை கொடுத்து மறைந்துள்ளார்.

அந்தக் கல் லிங்க வடிவில் இருந்தால் ஊருக்கும் நடுவில் அந்தக்கல்லை வைத்து வழிபாடு செய்தார். கிராம மக்களும் வணங்கினர், சலக தோஷங்களும் நீங்கி அப்பகுதி மக்கள் விவசாயத்தில் செல்வ செழிப்புடன் வசிக்கின்றனர்.  கீற்றுக் கொட்டகையாகி பின் நாளில் ஓட்டு கட்டமாகி 1961 ம் ஆண்டுகாங்கிரிட் கட்டத்தில் காசி விஸ்வநாதரை போன்று தெற்கு முகம் பார்த்து ஸ்ரீ உத்திரா பசுபதியாராக அருள் பாலிக்கிறார். 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிேஷகம் நடக்கிறது.   புத்திர பாக்கியத்திற்கு சிறந்த கோவிலாக உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் திருமணமான அனைவரும் புத்திர பாக்கியத்துடன் வசிக்கின்றனர்.  முற்றிலும் கிராம நிர்வாகத்தின் கட்டுப் பாட்டில் கோவில் உள்ளது.

இது  ஒரு புறமிருக்க கோவிலில் அம்மன் இல்லாதால் அருகில் ஸ்ரீமாரியம்மன் சிரித்தநிலையில் கிழக்கு முகம் பார்த்து அருள் பாலிக்கும்  அம்மனுக்கு தனி சந்நதியில் ஒரு கலசத்துடன் கோவில் அமைந்துள்ளது.  சகல நிகழ்ச்சிகளுக்கும் இந்த அம்மனை அப்பகுதி மக்கள் வணங்கி செல்கின்றனர். அப்பகுதி சிறுவர்கள் சிறு தொண்டர் வரலாற்றை நாடமாக நடித்து வெளிபடுத்துகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காலை நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுதல்
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar