சிவராத்திரி என்று அழைக்கப்படும் மாசி களரி திருவிழா 4 நாட்கள் நடைபெறும்.
தல சிறப்பு:
பழையனுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் காவல் தெய்வம், குழந்தைப் பேறு அருளும் தலம் என்பதால் சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் இங்கு வந்து வேண்டுவது வழக்கம், முதல் குழந்தைக்கு எல்லா மக்களும் சந்தன என ஆரம்பிக்கும் எழுத்தில் பெயர் வைப்பது வழக்கம், உதாரணமாக சந்தனகுமார், சந்தனராஜா, சந்தானம், சந்தான ஈஸ்வரி, சந்தான வள்ளி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி:
சந்தன கருப்பண சாமி திருக்கோயில்,
பழையனுார், திருப்புவனம் தாலுகா,
சிவகங்கை மாவட்டம் 630611
போன்:
+91 90033 51605
பொது தகவல்:
கோயிலில் சுந்தர மகாலிங்கமும், அங்காள ஈஸ்வரியும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இவர்களுடன், சோணை சாமி, ராக்காயி, பேச்சி, இருளாயி அம்மன் உள்ளனர்.
பிரார்த்தனை
குழந்தைப்பேறு, விவசாயம் செழிக்க, உடல் நலம் காக்க பிராத்தனை செய்கின்றனர்
நேர்த்திக்கடன்:
பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
சுதந்திரத்திற்கு முன் ராமநாதபுர ராஜா சேதுபதி பரம்பரையைச் சேர்ந்த சந்தனதேவன் என்பவரை பழையனுபர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு காவல்வீரர்களுடன் நியமிக்கப்பட்டார். கிராமமக்கள் வழிபட சுந்தரமகாலிங்கம் கோயில் உருவாக்கினார். இதற்காக பழையனுபரில் அரண்மனையும் பராமரிப்பு செலவிற்காக விவசாய நிலங்களும் வழங்கப்பட்டன.
விவசாய நிலங்களில் சோளமும், வரகு போன்ற தான்ய வகைகளும் பயிரிடப்பட்டன. விவசாயம் செழித்து நன்கு விளைந்த கரிசல் பூமி என்பதால் விளைச்சலின் ஒரு பகுதி ராமநாதபுர அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செல்வ செழிப்பு மிக்க இப்பகுதி பற்றி கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் இப்பகுதியை கைப்பற்ற படையெடுத்து வந்தனர். அதில் நடந்த சண்டையில் சந்தனதேவன் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடலும் கோயில் வளாகத்தில் புதைக்கப்பட்டது. சந்தன தேவரின் வாரிசுகளையும் சுட்டு கொல்ல ஆங்கிலேயர்கள் முயன்ற போது சுந்தரமகாலிங்கம் கோயிலினுள் புகுந்து உயிர் தப்பியதாகவும் அதனாலேயே குழந்தை வரம் வேண்டி நேர்த்திகடன் செலுத்துவது பக்தர்களின் வழக்கம். சந்தனதேவன் வகையறாவை சேர்ந்தவர்கள் பரம்பரை டிரஸ்டிகளாக உள்ளனர். தற்போது மூன்று பேர் கோயில் டிரஸ்டிகளாக உள்ளனர்.
இருப்பிடம் : திருப்புவனத்திலிருந்து (10 கி.மீ) நரிக்குடி செல்லும் வழியில் பழையனுார் உள்ளது. திருப்புவனம் மற்றும் மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு, மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7.40 9.10 10.10 11 மணி மதியம் 1.30 மாலை 4.30, 5.40 இரவு 7.40, 9 மணி ஆகிய நேரங்களில் நகர பேருந்துகள் திருப்புவனம் வழியாக இயக்கப்படுகின்றன. திருப்புவனத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருப்புவனம், மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை
தங்கும் வசதி : சிவகங்கை
கொங்கு டவர்ஸ் சத்திய மூர்த்தி தெரு, சிவகங்கை போன்: +91 98424 64749 மீனா ரெசிடன்சி காந்தி வீதி, சிவகங்கை போன்: +91 4575 242 424 94879 72424 பி.என்.ஆர்.,லாட்ஜ் தொண்டி ரோடு சிவகங்கை போன்: +91 94426 40803 ஸ்ரீசண்முகபவன் லாட்ஜ் அரண்மனை வாசல் சிவகங்கை போன்: +91 98424 40432 ஜெய் லாட்ஜ் காந்தி வீதி , சிவகங்கை போன்: +91 98424 41096 பி.எல்.எஸ்., லாட்ஜ் அரண்மனை வாசல் சிவகங்கை போன்: +91 4575 240488 சலீம் டவர்ஸ் பாரத் லாட்ஜ் நேரு பஜார் சிவகங்கை போன்: +91 948874 5577 இதயா டவர்ஸ் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சிவகங்கை போன்: +91 91504 84949