பிரதி மாத பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் தமிழ் மாத பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 11.00 வரை மாலை 5.00 மணி 08.00 வரை
முகவரி:
அருள்மிகு சோழீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
விக்கிரமங்கலம் , அரியலூர். 621 701.
போன்:
+91 4329 228649, 90925 54154, 8825823382
பிரார்த்தனை
வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற சிறப்புப் பிரார்த்தனைகள் மாலை 7.00 - 8.00 மணி வரை செய்யப்படுகின்றன.
தலபெருமை:
சோழமன்னர்களின் அரன்மனை : சோழமன்னர்கள் வந்து தங்குகின்ற அரன்மனைகள் இங்கு
கட்டப்பட்டன. இந்த அரன்மனையில் விக்கிரமசோழன் இரண்டாம் குலோத்துங்கன்,
மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய மன்னர்கள் தங்கியிருந்து அரசானைகள்
வெளியிட்டதை கீழ்ப்பழுவூர், வேலூர், திருப்புலிவனம், அச்சிறுபாக்கம்,
பிரம்மதேசம், அய்யன்பேட்டை, ஆலங்குடி ஊர்களில் உள்ளன.
பெருவழிகள்
தஞ்சாவூருக்கும், கங்கைகொண்ட சோழப்புரத்துக்கும் இடையே இவ்வூர் வழியாச்
சென்ற நெடுஞ்சாலை அக்காலத்தில் விளாங்குடிப் பெருவழி,
குலோத்துங்கசோழப்பெருவழி என அழைக்கப்பட்டன. இச்சாலை தஞ்சாவூர், விளாங்குடி,
கீழப்பழுவூர், வி.கைகாட்டி, விக்கிரமங்கலம், மூட்டுவாஞ்சோp, கோவிந்தபுரம்,
ஸ்ரீ புரத்தான், மதனத்தூர் வழியாக கங்கைகொணட சோழபுரம் சென்றடைந்தது.
தல வரலாறு:
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஊரின் முற்காலத்துப் பெயர் விக்கிரமசோழபுரம் என்பதாகும். கங்கையும் கடாரமும் வென்று புகழ் ஈட்டடிய முதலாம் இராஜேந்திர சோழனின் மற்றொரு பெயர் தான் விக்கிரம சோழன். இந்த ஊர் வணிக நகரமாக இருந்தது. இங்கு அவர் பெயரில் இராஜேந்திர சோழீஸ்வரம் என்ற பெரிய சிவன் கோயில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் விக்கிரமங்கலம் என மருவியது என இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
ஊரின் ஈசானிய மூலையில் அமைந்து இருக்கும் இந்த கோயிலில் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்மனின் திருநாமம் பிறையணியம்மை என்ற பூரண சந்திரகலாம்பிகை. இங்குள்ள சனீஸ்வரர் சன்னிதியில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தாமரை, அரளி போன்றவற்றால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபாட்டால் நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணத்தடைகள் நீங்கி புத்திரபாக்கியகங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே போல் பைரவ சன்னிதியில் வழிபாடுகள் செய்தால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி வளமான வாழ்க்கை அமையும். இக்கோயிலை சுற்றி அமைந்துள்ளன அழகான நான்கு பெரிய இராஜ வீதிகள். சோழீஸ்வரம் கோயிலின் எதிரில் திருக்குளம் உள்ளது. ஊரின் தெற்கில் ஓடும் மருதையாறு இராஜேந்திர சோழன் காலத்தில் விக்கிரமசோழப்பேராறு என அழைக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்பிரிவுகள் : சோழகாலத்தில் இவ்வூர் கடாரங்கொண்ட சோழவளநாட்டு மதுராந்தக வளநாடு என்னும் நாட்டுப்பிரிவுகளின் கீழ் இருந்துள்ளது. வணிகர்கள், பெருமக்கள், சமணம், புத்தர், சிலைகள், சோழபுரஞ்செட்டியார்கள் : அவ்வூர் ஏராளமான வணிகர்கள் வாழ்ந்துள்ளனர். அவார்கள் தெருக்கள் கிடாரங்கொண்ட சோழப்பெருந்தெரு, மதுராந்தகப்பெருந்தெரு என அழைக்கப்பட்டது. இங்குள்ள சமனர் புத்தர் சிலைகள் சோழர் காலத்தில் திசை ஆயிரத்தி ஐந்நூற்றுவார் என்ற வணிகக்குழு வணிகர்களால் வழிப்படப்பட்ட சிற்பங்களாகும். இங்கு வாழ்ந்த செட்டியார்கள் சோழபுரஞ்செட்டியார் என்ற பெயரிலும் பல்வேறு ஊர்களில் இன்றும் வாழ்கின்றனர்.
உலைக்களமேடு : ஆலவாய் என்ற சோழர் காலத்தில் மிகப்பெரிய தொழிற்கூடமாக நிகழ்ந்தது. இங்கு படைக்கருவிகள், செப்புத்திருமேனிகள் மற்றும்ர் பிற உலோகப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது இந்த இடம் உலைக்களமேடு என அழைக்கப்படுகிறது.