அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
தர்மசாஸ்தா |
|
உற்சவர் | : |
தர்மசாஸ்தா |
|
அம்மன்/தாயார் | : |
பூரணை, புஷ்கலா |
|
ஊர் | : |
நுாரணி |
|
மாவட்டம் | : |
பாலக்காடு
|
|
மாநிலம் | : |
கேரளா |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
கார்த்திகை மாதப்பிறப்பு, சாஸ்தாப்ரீதி மண்டல பூஜை, பங்குனி உத்திரத்தன்று தேர்திருவிழா |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்கு நடக்கும் அன்னதானத்தில் பங்கேற்றால் உடல்நலத்துடன் நுாறாண்டு காலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | அதிகாலை 5:30 – 11:30 , மாலை 5:30 – 7:30 மணி | | | | |
|
முகவரி: | | | | | |
தர்மசாஸ்தா கோயில், நுாரணி கிராமம், கேரள மாநிலம் |
|
| | |
|
போன்: | | | | | |
+91 491 - 250 4320 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
கேரள மாநிலம் நுாரணி கிராமம் என்றதுமே சாஸ்தா தான் நினைவுக்கு வருவார். 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தொடங்கப்பட்ட ‘சாஸ்தா ப்ரீதி’ என்னும் மண்டல விழாவிற்கு பக்தர்கள் ஆண்டுதோறும் பெருமளவில் கூடுகின்றனர். இங்கு நடக்கும் அன்னதானத்தில் பங்கேற்றால் உடல்நலத்துடன் நுாறாண்டு காலம் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
|
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
மண்டலபூஜையை முன்னிட்டு வரும் டிச.30ல் துளசியம்மன் பூஜையும், டிச. 31 சாஸ்தா ப்ரீதி வழிபாடும், அன்னதானமும் நடக்கின்றன.
| |
|
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
கார்த்திகை மாதப்பிறப்பு முதல் 48 நாட்கள் இங்கு நடக்கும் மண்டல பூஜை சிறப்பானது. இதில் தினமும் இரவில் பாரம்பரிய முறைப்படி ஐயப்பன் பாடல்களைப் பாடுவர். விழாவின் நிறைவுநாளில் அன்னதானம் அளிப்பர். அதில் ஐந்து பாயாசம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் நடக்க காரணமானவர் சூடாமணி அய்யர். அவரது குடும்பத்தில் 30 வயதுக்கு மேல் யாரும் உயிருடன் வாழ்ந்ததில்லை என்னும் நிலை தொடர்ந்தது. இதிலிருந்து விடுபடுவதற்கு சாஸ்தா கோயிலில் அன்னதானம் அளித்தால் தீர்க்காயுளுடன் வாழலாம் என்று துறவி ஒருவர் வழிகாட்டினார். அதன்படியே செய்ய சாஸ்தா அருளால் பலன் கிடைத்தது.
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
கரூர்மனை இல்லத்தைச் சேர்ந்த நம்பூதிரிகள் இப்பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் குடும்பங்களில் நுாறு குழந்தைகள் (உண்ணிகள்) இருந்ததால் ‘நுாறுண்ணி’ எனப் பெயர் பெற்றது. தற்போது நுாரணி எனப்படுகிறது. இங்கு வசித்த நம்பூதிரி ஒருவர் ஆரியங்காவு சாஸ்தாவை வழிபட்டு வந்தார். வயதான பிறகு அவரால் ஆரியங்காவுக்குச் செல்ல முடியவில்லை. ஒருநாள் கனவில் தோன்றிய சாஸ்தா, ‘சிலைவடிவில் என்னை பூஜித்தால் உம் கவலை தீரும்’ என அருள்புரிந்தார். அதன்படியே நம்பூதிரி வழிபட்ட தர்மசாஸ்தா பூரணை, புஷ்கலாவுடன் சிவலிங்க வடிவில் இக்கோயிலில் குடிகொண்டிருக்கிறார். ஒருசமயம் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள், நிலத்தை தோண்டும் போது கடப்பாரை கல்லில் பட்டதும் ரத்தம் பீறிட்டது. திகைத்து போன மக்கள் நம்பூதிரிகளின் உதவியை நாடினர். தேவ பிரசன்னம் பார்த்த போது அது தர்மசாஸ்தாவின் சிலை என்பதையும், அருகில் பூரணை, புஷ்கலா சிலைகள் இருப்பதையும் அறிந்தனர். அச்சிலைகள் வழிபாட்டுக்காக நம்பூதிரிகளிடமே ஒப்படைக்கப்பட்டன. அதன் பின் இங்கு சாஸ்தாவுக்கு கோயில் கட்டப்பட்டது.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு நடக்கும் அன்னதானத்தில் பங்கேற்றால் உடல்நலத்துடன் நுாறாண்டு காலம் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|