அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
பரசுராமர் |
|
உற்சவர் | : |
பரசுராமர் |
|
தீர்த்தம் | : |
வசிஷ்தி நதி |
|
ஊர் | : |
ரத்தினகிரி |
|
மாநிலம் | : |
மகாராஷ்டிரா |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
பரசுராமர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீராமநவமி |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
லாப முத்திரையுடன் வீற்றிருக்கும் இவரை தரிசித்தால் தொழிலில் லாபம் பெருகும். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
|
|
|
தலபெருமை: | |
|
|
|
|
இது எங்கும் காணமுடியாத அரிய தரிசனம். கைகளில் வில், அம்பு, கோடரியை ஏந்தியபடி ‘லாப முத்திரை’ காட்டியபடி பரசுராமர் உள்ளார். பிரம்மா, விஷ்ணுவும் நான்கு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியுள்ளனர். மராட்டிய மன்னர் வீரசிவாஜி இங்கு அடிக்கடி தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு அருகில் வசிஷ்தி நதி ஒடுகிறது. படகு சவாரியும் இதிலுண்டு. குன்றில் இருந்து காண்போரின் கண்களுக்கு நதி இனிமை சேர்க்கிறது.
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
மேய்ச்சல் நிலமான இப்பகுதியில் புதர் ஒன்றில் பசு ஒன்று தினமும் பால் சுரந்து வந்தது. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பரசுராமர் குறிப்பிட்ட இடத்தில் சுயம்பு வடிவில் தான் புதைந்திருப்பதாக தெரிவித்தார். இதன் பின் இங்கு சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்தனர். குன்றின் மீது கட்டப்பட்ட கற்கோயில் இது. படிகள் மீதேறியே கோயிலுக்கு செல்ல வேண்டும். 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பிரம்மேந்திர சுவாமிகள் திருப்பணி செய்து கோயிலை புதுப்பித்தார். மூலவர் பரசுராமருடன் பிரம்மா, விஷ்ணுவும் கருவறையில் நின்ற கோலத்தில் உள்ளனர்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
லாப முத்திரையுடன் வீற்றிருக்கும் இவரை தரிசித்தால் தொழிலில் லாபம் பெருகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|