Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிவசுப்பிரமணியர்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: வன்னிமரம்
  தீர்த்தம்: கோயிலுக்கு எதிரில் உள்ள குளம்
  ஊர்: வில்லுடையான் பட்டு
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கோயில் எதிரே அமைந்துள்ள திருக்குளத்தில் பங்குனி உத்திரத்தன்று தெப்ப உற்சவம் நடக்கும். கார்த்திகை, தைப்பூசம் மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் உள்ள முருகன் சிலை பூமியில் புதைந்து கிடந்ததாகவும், அதை உழுத போது, அவர் வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உழும் போது கலப்பை தட்டி நின்றதாகவும், மண்வெட்டி கொண்டு அவ்விடத்தில் வெட்டிய போது மூர்த்தியின் இடது தோளில் சிறு வடு ஏற்பட்டதையும் இப்போதும் பார்க்கலாம். இங்கு முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இவருக்கு நெற்றிக்கண்ணும் இருக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு- 607 801 கடலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-94434 45055 
    
 பொது தகவல்:
     
  வில்லேந்திய ராமன், அர்ஜூனன் ஆகியோரை கோயில்களில் பார்க்கிறோம். ஆனால், வேலேந்தும் முருகப்பெருமானும், வில்லேந்தி அருள்பாலிக்கும் கோயில் நெய்வேலி அருகேயுள்ள வில்லுடையான் பட்டு கிராமத்தில் இருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி,அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகளை செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது. 
    
 தலபெருமை:
     
  கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு முன்பாக பெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவுக்காக காத்திருக்கும் சேவகர்கள் போல காட்சியளிக்கிறது. அடுத்து இருபுறங்களிலும் 8 அடி உயர துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவசுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்தி பாதங்களில் இறகு அணிந்து அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகளை செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது.கோயிலுக்கு எதிரே அரசும், வேம்பும் உள்ளது. மரத்தின் அடியில் விநாயகப்பெருமான், நாகதேவதைகள் சன்னதியும், கோயிலின் பின்புறம் வன்னிமரமும், நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.  
     
  தல வரலாறு:
     
  சில யுகங்களுக்கு முன்பு காடாக இருந்த இந்த பகுதியில் தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்தனர். அவர்களின் தவத்தைக் காக்க முருகன் வில்லேந்தி காவல் காத்தார். அதாவது, சூரசம்ஹாரத்தின் போது தான் முருகனுக்கு வேல் கிடைத்தது. அதுவரை அவரது ஆயுதமாக வில் தான் இருந்துள்ளது. எனவே இது மிகவும் பழமை வாய்ந்த தலமாகும். முருகன் முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வீரனாகவும் காட்சியளித்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar