வைகாசி விசாகத் திருவிழா - 10 நாள்
ஆவணி கடைசி வெள்ளி - புஷ்பாபிஷேகம் - 1 நாள்
பங்குனி திருக்கல்யாணம் - 7 நாள்.
தல சிறப்பு:
வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில்,
வேலிமலை - 629 175, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.
போன்:
+91-4651 - 250706, 233270
பொது தகவல்:
மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவர் தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். 10 அடி உயர சிலையாக சுவாமி பிரமாண்டமாக காட்சி தருவது சிறப்பு. சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படுகிறது. இதை வைத்து பார்க்கின்ற போது இந்த சுதை புத்தர்கால கட்டத்தை சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். சுதை சாதாரண கல் வகையை சேர்ந்ததாக இல்லாமல் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வேண்டும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கியருளும் கடவுளாக வேலிமலைக் கடவுள் திகழ்கிறார். திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார விருந்தி, கல்வி ஞானமும், உடல்பலமும் கொடுக்கும் தெய்வமாக திகழ்கிறார். மனபலம், உடல் பலம் ஆகியவை தருபவராகவும், மனதுக்கு அமைதியும் தரும் சிறப்பு பெற்றவராகவும் உள்ளார். இங்குள்ள இறைவனை மலையேறி வணங்கினால் நம் உடற்பிணியெல்லாம் விட்டு விலகும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
தலபெருமை:
கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் - வள்ளி தோழியரோடு தினைப்புனம் விளையாடிய இடமாக கருதப்படுகிறது.
தல வரலாறு:
முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமையான இக்கோயிலில் தென் கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.