Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அம்பே மா அம்மன்
  தல விருட்சம்: அரசமரம்
  ஊர்: அம்பாஜி, பனஸ்கந்தா
  மாவட்டம்: அகமதாபாத்
  மாநிலம்: குஜராத்
 
 திருவிழா:
     
  நவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் (3ஆயிரம் கிலோ) செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில், அம்பாஜி, பனஸ்கந்தா-385 110. அகமதாபாத் மாவட்டம். குஜராத் மாநிலம்.  
   
போன்:
   
  +91-2749-262 136,264 536,262 626, 262 930 
    
 பொது தகவல்:
     
  அம்மன் சன்னதியின் எதிரில் ஒரு பள்ளமான இடத்தில் நாகேஸ்வரர், அனுமான், நாகராஜர் சிலைகள் உள்ளன. இதற்கு நாமே தீர்த்தம் ஊற்றி, பூத்தூவி அர்ச்சனை செய்யலாம். செம்பால் செய்யப்பட்ட பத்தடி நீள முள்ள வித்தியாசமான உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு குங்குமம் மற்றும் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. கோயிலைச் சுற்றி 8 கி.மீ., தொலைவுக்குள் சோம்நாத் என்ற இடத்தில் சோமேஸ்வர் கோயில் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் கப்பார் மவுன்டன் என்ற இடத்தில் பழைய அம்பாஜி கோயில் உள்ளது.

900 படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி உண்டு. இங்கு அம்மனின் பாதமும், ஒரு விளக்கும் மட்டுமே இருக்கிறது. கடைகளில் மார்பிள் சிலைகள், பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  பிறந்த நாளுக்கு மறுநாள் இங்கு வந்து ஆண் குழந்தைகளுக்கு மொட்டை போட்டால், காலமெல்லாம் அக்குழந்தை செல்வச் செழிப்புடனும், கிருஷ்ணனைப் போல் விவேகத்திலும் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  சிலையே யந்திரம்: யந்திர வழிபாடு என்பது மிகவும் பழமையானது. அம்பாஜி அம்பே மா கோயிலில் அம்பிகையை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்த்தியிருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், உண்மையில் அம்மன் சிலை இங்கு இல்லை. "விஷயந்த்ரம்' என்ற யந்திரமே வழிபாட்டில் உள்ளது. இந்த யந்திரத்தை ஒரு மார்பிள் பிளேட்டில் பொருத்தி, நகைகளால் அலங்கரித்துள்ளனர்.

இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. இதை ஸ்ரீயந்த்ரம் என்றும் சொல்கின்றனர். இதை தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இது தங்கத்தில் செய்யப்பட்டது. ஆமை வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 51 எழுத்துக்கள் உள்ளன. இந்த யந்த்ரத்தை அருகில் சென்று பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. பக்கத்தில் சென்று பார்க்க விரும்புவோரின் கண்களை பேன் டேஜ் துணியால் கட்டி விடுவார்கள். இதன் சக்தியைத் தாங்கும் வலிமை யாருக்கும் இல்லை என்பதால் இம்முறை பின்பற்றப்படுகிறது.

அம்பாஜி அம்பே மா சன்னதி அளவில் சிறியது தான். ஆனால், மண்டபம் மார்பிள் கற்களால் ஆனது. பிரகாரமும் மார்பிள் கற்களால் அழகுற அமைக்கப் பட்டுள்ளது. தலவிருட்சமாக அரசமரம் உள்ளது. தேவியை "அம்பே மா' என்றும், "சச்சார் சவுக்வாலி' என்றும் அழைக்கின்றனர். கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் (3ஆயிரம் கிலோ) செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.

அம்பாஜி கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஏனெனில், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்த போது, அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை தரப்பட்டுள்ளது. நந்தகோபனும், யசோதை தாயும் அவரை இக்கோயிலுக்கு கூட்டி வந்து மொட்டை அடித்துள்ளனர். அன்று முதல் இன்று வரை இக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டையடிக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

விநாயகரின் பேரன்களுக்கு சன்னதி: வடமாநிலங்களில் விநாயகர் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது. இங்கு விநாயகர், சித்தி, புத்தி என்ற மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், இவர்களது மகன்களான குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது விசேஷ அம்சம். விநாயகருக்கு வடமாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  மகிஷாசுரன் என்ற அரக்கன் தன் தவ வலிமையால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாதென அக்னிதேவனிடம் வரம் வாங்கினான். இந்த வரத்தின் வலிமையால் இந்திரலோகத்தை வளைத்தான். பின்னர் ஆசை மிகுதியால் வைகுண்டத்தையும், கைலாயத்தையும் பிடிக்க எண்ணினான். வரத்தின் பலத்தால் சிவநாராயணர்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை.

இந்த நேரத்தில், வரங்களை தவறாக பயன்படுத்துவோரையும் அழித்து ஒழிக்கும் தேவி பகவதியை அவர்கள் வேண்டினர். அவள் அந்த அசுரனைக் கொன்று இத் லத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

மற்றொரு கதையின்படி, ராம, லட்சுமணர்கள் சீதையைத் தேடி, கானகத்தில் திரிந்த போது, சிருங்கி முனிவரைச் சந்தித்தனர். அம்பாஜி அம்பே மா தேவியை தரிசித்தால், இதற்கு வழி கிடைக்கும் என அவர் ராமனிடம் கூறினார். அம்பே மா தேவி மனமிரங்கி, "அஜய்' என்ற அஸ்திரத்தைக் கொடுத்தாள். அதைக் கொண்டு ராவணனை வென்று, சீதையை மீட்டார் ராமன்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் (3ஆயிரம் கிலோ) செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar