நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை தமிழகத்தில் எங்குமில்லை. புதுச்சேரி மாநிலத்தின் புகழ் பெற்ற திருநள்ளாறு தலத்தில் கூட இப்பூஜை இல்லை. ஆனால், இந்த பூஜை சேலம் சாஸ்தாநகர் ஐயப்பன் கோயிலில் நடக்கிறது.
தோஷ நிவர்த்தி கோயில் : குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து மனமுருகி ஐயப்பனை தியானிக்கின்றனர். இந்த குறையுடன் வருபவர்களுக்காக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மேலும் சனிதோஷம் உள்ளவர்களுக்காக "நீராஜனம்' என்ற விசேஷ பூஜை இங்கு செய்யப்படுகிறது. இந்த பூஜை சனிபகவான் ஸ்தலமான திருநள்ளாறு கோயிலில் கூட இந்த பூஜை ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் நவக்கிரக ப்ரீதியும் செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் "சகஸ்ர கலசாபிஷேகம்' நடக்கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து "புனித நீர்' கொண்டுவரப்படுகிறது. அந்த சமயத்தில் பிரம்மாண்டமான வேள்வி நடத்தி, புண்ணிய நதிகளின் நீரை கொண்டு அபிஷேகம் செய்து ஐயப்பனுக்கு பூஜை செய்வர்.
சேவை : ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்கள் தங்க இடமும், உணவும் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.
|