வைகாசியில் கொடை விழா, அம்மனுக்கு உகந்த நாட்கள் உட்பட செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
தல சிறப்பு:
காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம்,
தூத்துக்குடி மாவட்டம்
பொது தகவல்:
சாந்தமான அம்மன்: கோயிலில் மாடன், மாடத்தி, பைரவர் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த அம்மனின் தங்கையான காளியம்மன் கோயில் 200 அடி தூரத்தில் உள்ள பசும்பொன் நகரில் உள்ளது.
பிரார்த்தனை
கனவால் பயம் கொண்டர்கள் பிரார்த்தனை தலம்: நாகதோஷம், நோய்களின் பயணம் கொண்டவர்கள், திருமணத்துக்கு காத்திருக்கும் கன்னி பெண்கள், புத்திர பாக்கியம், நவகிரகப் பாதிப்பு, தோஷம் உள்ளவர்களில் குறிப்பாக ராகு தோஷம் உள்ளவர்கள், போராட்டங்களில் வெற்றி வாகை சூட விரும்பும் வீரர்கள், துன்பத்தாலும், துயரத்தாலும், துக்கத்தாலும், பாதிக்கப்பட்டு கஷ்டமும் கவலையும் உடையவர்கள் வழிபடுகின்றனர். கனவால் பயம் கொண்டவர்கள் வசவப்பபுரம் செல்வி அம்மனை தரிசித்து நிவர்த்தி பெறலாம்.
நேர்த்திக்கடன்:
ராகு கால வழிபாடு : செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் பெண் பக்தர்கள் வழிபடுகின்றனர். மாதம் தோறும் சுக்லபட்ச அஷ்டமி மற்றும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாளிலும் வழிபடுகள் நடக்கிறது. அம்மனிடம் விடுத்த பிரார்த்தனை நிறைவேறியவுடன் பக்தர்கள் அம்மனுக்கு கிரீடம் மற்றும் அம்மனின் உருவங்கள் செய்து காணிக்கையாக வழங்குகின்றனர்.
தலபெருமை:
காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார். கைகளில் உடுக்கை, பாசம் (கயிறு), சூலம், கொப்பறை மற்றும் சூலம், கபாலம், கேடயம், கத்தி, மணி, வில், அம்பு ஆகியவற்றுடன் காணப்படுகிறார்.
தல வரலாறு:
கலியுகத்தில் கணபதியையும், துர்க்கையையும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகின்றன.வெற்றியின் சின்னத்துக்கு காளியின் அம்சமான துர்க்கையே லட்சணமாகும். இவளே மகாகாளியாகவும் , மகாலட்சுமியாகவும், மகா சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். துன்பங்களை போக்கி, இன்பத்தைக் கொடுப்பவள் மகா சக்தி.காளியின் அம்சமான சக்தி, "துர்க்கமன்' என்ற அரக்கனை போரில் சம்ஹரித்ததால் துர்க்கையென்றும், ஆன்மாக்களை (அடியார்களை) அரண் போன்று காப்பாற்றுவதால் துர்க்கையென்றும் பெயர் பெற்றார். தென்மாவட்டங்களில் ஊருக்கு காவல் தெய்வமாக விளங்கும் காளியின் அம்சம் கொண்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்கள் உள்ளன.குறிப்பாக வடக்கு வாசலை கொண்ட அலங்கார செல்வி அம்மன் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.குறிப்பாக வசவப்பபுரம் அலங்கார செல்வி அம்மன் கோயிலில் அலங்கார செல்வி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார்.