கார்த்திகையில் தீப அலங்கார பூஜை, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி. அன்று ஏகாதசி மண்டபத்தில் உற்சவர் மண்டபத்தில் காட்சி தருவார். தைப்பூசத்தன்று கருடசேவை, புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், கார்த்திகை பஞ்சமி திதியில் தாயாருக்கு ஐந்து நாள் பிரம்மோற்ஸவம், ஆழ்வார்கள் திருநட்சத்திரம், தீபாவளி.
தல சிறப்பு:
பாண்டிய மன்னர்களின் காலத்தில் மூடப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றின் மீது கருவறை அமைக்கப்பட்டுள்ளது.மன்னர்கள் இந்த சுரங்கப்பாதையை ஆபத்து காலத்தில் பயன்படுத்திய போது, இந்தப் பெருமாளே தங்களுக்கு காவலாக இருக்க வேண்டும் என வணங்கிச் சென்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கை, நேர்த்திக் கடனைக் கூட பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு செலுத்துகின்றனர்.
தோஷம் நீக்கும் கருடாழ்வார்: இங்குள்ள கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வணங்குவதால் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இவருக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து வணங்குவதால் நல்ல பலன் கிடைக்கிறது. இங்குள்ள அனுமானை வழிபட்டால் அறிவு, பலம், தைரியம், கீர்த்தி, செல்வாக்கு வளரும்.
சுதர்சன சக்கரப்பாடல்: தீர்க்காயுளுடன் வாழ, விருப்பங்கள் நிறைவேற, நல்ல குடும்பம் அமைய, திருமணமாக, தெளிவான அறிவு பெற, மனம் மகிழ்ச்சியடைய, எதிரிகளால் ஏற்படும் சிரமம் நீங்க, பாவங்கள் தொலைய, வீடுகட்ட, செல்வம் பெருக, செயல்பாடுகள் அனுகூலமாக, ஆபத்து அகல, மனக்குறை நீங்க, சோம்பல் ஒழிய, உயர் பதவியடைய, துக்கம் விலக, புகழும் கீர்த்தியும் பிரகாசிக்க, குடும்பம் நலம் பெற, குபேரசம்மந்தம் அடைய, பக்தி பெருக, அரசு தேகபலம் பெற, பயம் பாவம் போக, தொலைந்த பொருள் கிடைக்க, சிறப்பாக படிக்க, தொழில் வளர, ஆன்மிக அறிவு ஏற்பட, நாடும் வீடும் நலம் பெற இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் பக்தர்கள் சுதர்சன சக்கரப்பாடல் பாடி வழிபடுகின்றனர். காலையும், மாலையும் விளக்கேற்றி, சக்கரத்தாழ்வாரை ஒரு முகமாய் மனத்தில் நினைத்து பாடல்களைப் பாடுவோருக்கு எண்ணியது ஈடேறும் என்ற நம்பிக்கையுள்ளது.
தல வரலாறு:
பாண்டிய மன்னர் ஒருவர் தன்னுடைய குருவிடம், மந்திர உபதேசம் பெற்று, தனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த செவ்வாய்பேட்டையில் பெருமாள் எழுந்தருள பக்தர்களுடன் சேர்ந்து கடும் தவம் புரிந்தார். தவத்தை ஏற்ற பெருமாள், திருமணக்கோலத்தில் தாயார்களுடன் காட்சி தந்தார். தான் கண்ட பெருமாளுக்கு பிரசன்ன வெங்கடாஜலபதி என்று பெயரிட்ட மன்னர், தன் முன்னால் தோன்றிய பெருமாளைப் போலவே சிலை வடித்தார். பின்பு கோயில் கட்டப்பட்டது. மீன் சின்னத்தையும் பொறித்தார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பாண்டிய மன்னர்களின் காலத்தில் மூடப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றின் மீது கருவறை அமைக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் இந்த சுரங்கப்பாதையை ஆபத்து காலத்தில் பயன்படுத்திய போது, இந்தப் பெருமாளே தங்களுக்கு காவலாக இருக்க வேண்டும் என வணங்கிச் சென்றனர்.
இருப்பிடம் : சேலம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் அரை கி.மீ., தூரத்தில் நாலு ரோடு பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு இறங்கி, சத்திரம் வழியாக சென்றால் கோயிலை அடையலாம்.