இங்கு 24 மணி நேரமும் எரிந்துகொண்டே இருக்கும் நெய்விளக்கு பிரசித்திப் பெற்றது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
வொண்டி கொப்பால் சர்க்கிள், மைசூர்
கர்நாடகா மாநிலம்.
பொது தகவல்:
இங்கு வெள்ளைக் கல்லில் வடிக்கப்பட்ட ஸ்ரீராம லட்சுமணர் விக்கிரகங்கள் மற்றும் நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகியோரை தரிசனம் செய்யலாம்.
பிரார்த்தனை
பிரிந்தவர்கள் ஒன்று சேர, நோய், வறுமை, கடன் பிரச்சனை நீங்க, முன்செய்த பாவங்களிலிருந்து விடுபட இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற அபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
ஸ்ரீராமானுஜர் இங்கே பல காலம் தங்கி, ஆராதித்துப் பூஜித்த ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்! ஆழ்வார்களின் திருநட்சத்திரத் திருநாளில், பிரபந்தம் மற்றும் வேத பாராயணம், சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. அதேபோல் மே மாதம் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
இரண்யகசிபுவைக் கொன்றும்கூட ஸ்ரீநரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. அடுத்து, ஸ்ரீமகாலட்சுமியைப் பார்த்ததும், அவரது கோபம் தணிந்தது, உக்கிரம் காணாமல் போய், சாந்தம் குடிகொள்கிறது. ஆகவே இங்கே சாந்தமூர்த்தியாக, ஸ்ரீமகாலட்சுமியைத் தனது மடியில் அமர்த்தியபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீ நரசிங்கர். எனவே இவரின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு 24 மணி நேரமும் எரிந்துகொண்டே இருக்கும் நெய்விளக்கு பிரசித்திப் பெற்றது.