Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சென்னகேசவர்
  அம்மன்/தாயார்: சவுமியநாயகி
  ஊர்: பேளூர்
  மாவட்டம்: சிக்மகளூர்
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கோகுலாஷ்டமி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள மூலவர் மோகினி அலங்காரத்தில் காட்சி தருவது தனி சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில் பேளூர், சிக்மகளூர் கர்நாடகா.  
   
போன்:
   
  +91 8177- 222 218, 99647 17388 
    
 பொது தகவல்:
     
  மூலவரின் பின்புறத்தில் பெருமாள் பாதம் உள்ளது. யானை, குதிரைவீரர்கள், நடனமாதர்கள் என்று சந்நிதியின் பக்கச்சுவர்கள் முழுவதும் சிற்பங்கள் இடைவிடாமல் ஏழு வரிசையில் அமைந்துள்ளன. தசாவதாரக் காட்சிகள், சிவனின் கஜசம்ஹாரக்கோலம், லட்சுமி நாராயணர், சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி, இரண்யவதம் செய்யும் உக்ரநரசிம்மர் சிற்பங்கள் சிறப்பானவை. சென்னகேசவர் தவிர, கட்பே சென்னகேசவர், வேணுகோபாலர், வீரநாராயணர், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. கட்பே சென்னகேசவர் சிலை செய்யும் போது தேரை ஒன்று கல்லில் இருந்து வெளிவந்ததால் இப்பெயர் இடப்பட்டது. கட்பே என்றால் தேரை.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சென்னகேசவரை வேண்டிக்கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

மூலவர் சென்னகேசவர்: சென்னகேசவரின் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் செந்நிறத்தில் காட்சி தருகிறது. நின்றகோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். முகத்தில் பெண்மையின் எழிலும், கண்களில் அருளும் இழையோடுகிறது. மூக்குத்தி அணிந்திருக்கிறார். பாதத்தில் சதங்கையும், கொலுசும் அழகு செய்கின்றன. சங்கு, சக்கரம் இரண்டையும் மேல் இரு கைகள் தாங்கி நிற்கின்றன. வலக்கரத்தில் திருமகள்போல தாமரை மலரைத் தாங்குகிறார். இடக்கரம் கதாயுதத்தை தாங்கி நிற்கிறது. பெரிய பீடத்தின் மேல் 6 அடி உயரத்தில் இப்பெருமாளின் திருவுருவம் விளங்குகிறது. கேசவன் என்றால் தடைகளை நீக்குபவன் என்று பொருள். இக்கோயில் கோபுர கலசத்தைக் காண்பதால் சாபவிமோசனமும், சென்ன கேசவரின் பாதத்தைத் தரிசிப்பதால் பாவ விமோசனமும் உண்டாகும் என்பதை சிகர தரிசனம் சாபவிமோசனம், பாததரிசனம் பாவவிமோசனம் என்று குறிப்பிடுகின்றனர். கோபுரத்தைத் தாண்டிச் செல்லும்போது, கருடாழ்வார் சிறகை விரித்தபடி மூலவர் சன்னதியின் முன் திறந்த வெளியில் நின்றகோலத்தில் சேவை சாதிக்கிறார்.


மகரதோரண நுழைவாயில்: நுழைவு வாயிலில் உள்ள துவாரபாலகர்களான ஜெய,விஜயர் மகாவிஷ்ணுவின் அம்சத்தோடு திகழ்கின்றனர். அவர்கள் நிற்குமிடம் மகரதோரண நுழைவாயில் எனப்படுகிறது. வாயிலின் இருபுறமும் யானைகளும், ராஜாராணி சிற்பங்களும், சேடிப்பெண்கள், நாட்டியமாதர் வடிவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. வாசலைத் தொட்டால் வழுவழுப்பாக இருக்கிறது. இப்பகுதியில் மாக்கல் கிடைத்ததால் நுட்பமான வேலைப்பாடு சாத்தியமானதாகவும், அந்தக்கல் வெயில்,காற்று படும்போது இறுகி வழுவழுப்புத்தன்மை பெறுவதாகவும் சொல்கின்றனர்.

நவரங்க மண்டபம்: மூலவரின் சந்நிதி முன் இருக்கும் நவரங்க மண்டபத்தை அந்தராளம் சுதநாசி என்கின்றனர். இங்கிருக்கும் தூண்களின் வேலைப்பாட்டினைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நாட்டியப்பெண் தன் முடியைப் பின்னலிட்டு, ஆடை ஆபரணம் புனைவதும், கண்ணாடி பார்த்து திலகமிடுவதும், ஆடைதிருத்தி நடனத்திற்கு ஆயத்தமாவதுமாக பல சிலைகள் உள்ளன. மன்னன் விஷ்ணுவர்த்தனனின் மனைவி சாந்தளாதேவி நாட்டியம், இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள் என்பதால் இம்மண்டபத்தை அமைத்ததாகக் கூறுகின்றனர்.


சவுமிய நாயகி: பேளூரில் வீற்றிருக்கும் தாயார் சவுமியநாயகி. சவுமியம் என்றால் அழகு. தாயாரின் அழகில் மயங்கி சென்னகேசவப் பெருமாள் பாதம் தேய நடையாய் நடப்பதாகச் சொல்கின்றனர். வெள்ளிதோறும் தாயாரோடு பெருமாள் பவனி நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு சனிக்கிழமைகளில் மஞ்சனசேவையில் காட்சி தருகிறார். ஆடியில் சவுமியத்தாயாருக்கு நடக்கும் ஊஞ்சல் சேவை மிகவும் புகழ்பெற்றது.

அனைவரும் சமம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் இங்கு வந்தார். அனைத்து ஜாதிமக்களும் சென்னகேசவரை வணங்க ஏற்பாடு செய்தார். இப்பகுதி மக்கள் இவரை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.   தினமும் மதியம் அன்னதானம் நடைபெறுகிறது.


 
     
  தல வரலாறு:
     
  விருகாசுரன் பலவரங்களைப் பெற்றான். யாருடைய தலையில் கை வைத்தாலும் அவன் சாம்பலாகிவிடுவான் என்பதும் ஒருவரம். அதனால் அவனுக்கு பஸ்மாசுரன் என்றும் பெயர் வந்தது. பஸ்மம் என்றால் சாம்பல். கண்ணில் கண்டவர்களை எல்லாம் சாம்பலாக்கிவிடத் துணிந்தான். தேவலோகமும் அசுரனால் ஆட்டம் கண்டது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் செய்வதறியாமல் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினர். பெண் பித்தனான அசுரனை அவன் வழியிலேயே சென்று சம்ஹாரம் செய்ய மோகினியாக வடிவெடுத்தார் விஷ்ணு. அசுரனின் முன் சென்று அவனை மயக்கினார். காமவலையில் சிக்கிய அவனை நீராடிவரும்படி கூறினார். அவன் நீராடும் போது, தலையைத் தேய்க்கும்படி கூறவே, மோகினியின் அழகில் தன்னிலை மறந்திருந்த அவன், தலையில் கை வைக்க சாம்பலாகி விட்டான். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற உண்மையை உலகுக்கு உணர்த்த இந்த லீலையை நிகழ்த்தினார் விஷ்ணு. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மகாவிஷ்ணுவுக்கு கோயில் எழுந்தது. அதுவே பேளுர் சென்னகேசவர் கோயில். குடும்பத்துக்காக ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து கொண்டிருக்கும் பெண்கள் இவரை வணங்கி வந்தால், அந்தப் பணிகளை நிச்சயம் வெற்றியடையச் செய்வார்.

பஞ்சநாராயணர் கோயில்: பிட்டிதேவராய மன்னன் இப்பகுதியை பத்தாம் நூற்றாண்டில் ஆண்டு வந்தான். அவன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். மன்னனின் மகள் பேய்பிடித்து பைத்தியம் போல இருந்தாள். விஷ்ணுபக்தையான மன்னனின் மனைவி தமிழகத்தில் இருந்து வந்த ராமானுஜரின் உதவியை நாடினாள். ராமானுஜரும் பேயிடம் இருந்து இளவரசியை மீட்டாள். இந்நிகழ்ச்சிக்குப் பின், பிட்டிதேவராயன் தன் பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றிக் கொண்டு தீவிர விஷ்ணுபக்தனாகி ஐந்து கோயில்களைக் கட்டினான். இக்கோயில்கள் பஞ்சநாராயணத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விஷ்ணுவர்த்தன் கட்டியதே பேளூர் கேசவநாராயணர் கோயில். இதுதவிர, கடக் வீரநாராயணர், மேல்கோட்டை செல்வநாராயணர், தலக்காடு கீர்த்தி நாராயணர், குண்டுலபேட்டை விஜயநாராயணர் கோயில்களும் இவனால் கட்டப்பட்டன. சென்னகேசவர் கோயில் மிகவும் கலைநயம் மிக்கதாகும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் மோகினி அலங்காரத்தில் காட்சி தருவது தனி சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar