|
அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ரேணுகாதேவி |
|
ஊர் | : |
சவுண்டாட்டி, பெல்காம் |
|
மாவட்டம் | : |
பெல்காம்
|
|
மாநிலம் | : |
கர்நாடகா |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
இங்கு நடைபெறும் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்குள்ள மூலஸ்தானத்தில் அம்மனின் தலை மட்டுமே வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயில்
சவுண்டாட்டி, பெல்காம், பிஜாப்பூர், கர்நாடகா. |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
514ம் ஆண்டு பொம்மப்ப நாயக்கரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை 1975ம் ஆண்டு கர்நாடக அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இக்கோயில் எல்லம்மா கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
மன வேற்றுமையால் கணவனைப் பிரிந்த பெண்கள் இங்கு வந்து ரேணுகாதேவியை வணங்கி செல்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
இங்குள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
மன வேற்றுமையால் கணவனைப் பிரிந்த பெண்கள் இங்கு வந்து ரேணுகாதேவியை வணங்கி, உரிய பரிகாரம் செய்து கொண்டால், மீண்டும் கணவருடன் சேரும் பாக்கியம் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மனின் மூலஸ்தானத்துக்கு வெளியே சிறு கோயில் ஒன்றுள்ளது. அதில் சத்தியமா என்ற அம்மன் அருள்கிறாள். என்னைக் காண வரும் பக்தர்கள் கோயில் குளத்தில் குளித்துவிட்டு முதலில் சத்தியமாவை வணங்கி விட்டு, பிறகு தான் என்னிடம் வந்து வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என ரேணுகாதேவி கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
சித்தார்த்த பர்வத் என்ற குன்றில் குடிகொண்டு அருள்கிறாள் ரேணுகாதேவி. ஜமதக்னி முனிவரின் மனைவிதான் ரேணுகாதேவி. ஒருசமயம் கணவரின் கடும் கோபத்துக்கு ஆளாகி, மகன் பரசுராமனால் அவள் தலை சீவப்பட்டது. ரேணுகா தேவியின் தலை வெட்டப்பட்ட தலம் இது என்கிறார்கள். இங்கு அம்மன் தலையை மட்டும் காணலாம். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்குள்ள மூலஸ்தானத்தில் அம்மனின் தலை மட்டுமே வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|