இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
அடர்ந்த காட்டுப்பகுதியில் இருப்பதால், அடிவாரக் கோயிலை மட்டும் பக்தர்கள் செல்லும் நேரத்தில் திறக்கின்றனர். கோயில் அருகில் ஒரு குடும்பம் தங்கியுள்ளது.
முகவரி:
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
கேதவரம், குண்டூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.
பொது தகவல்:
விஜயவாடாவில் உங்கள் பயணம் காலை 6 மணிக்கு துவங்கட்டும். இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது மங்களகிரி பானக நரசிம்மர் கோயில். காலை 8மணிக்கு இங்கிருந்து 60 கி.மீ.தூரத்திலுள்ள வேதாத்ரியை 2மணி நேரத்தில் அடையலாம். இங்கு 12 மணி வரை தரிசனம் செய்யலாம். வேதாத்ரியில் மதிய உணவுக்குப் பின், மட்டபல்லி செல்லுங்கள். மாலை 4 மணிக்கு அடைந்து விடலாம். இங்கு தரிசனம் முடித்து அருகிலுள்ள ஹுசூர்நகரில் இரவு தங்கலாம்.
காலை 6 மணிக்கு இங்கிருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள வடபல்லியை அடையலாம். இங்கு செல்லும்முன் அர்ச்சகருக்கு போன் செய்யுங்கள். வடபல்லியில் இருந்து கேதவரத்துக்கு 60 கி.மீ., இங்கு அர்ச்சகர் இருப்பதில்லை. அருகிலுள்ள வீட்டிலுள்ள வாட்ச்மேன் கோயிலைத் திறந்து காட்டுவார். மலைக்கோயிலுக்கு செல்ல விரும்பினால், உள்ளூர் ஆட்களின் துணையைக் கேளுங்கள். மாலை 3 மணிக்குள் தரிசனம் முடித்து கிளம்புங்கள். விஜயவாடாவை 6 மணிக்குள் அடைந்து விடலாம்.
சென்னையில் இருந்து: 12077- சென்னை-விஜயவாடா (ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 7 மணி. இது தவிரவும் சில ரயில்கள் உள்ளன.
புதுச்சேரியில் இருந்து: 22403-புதுச்சேரி- டில்லி (டில்லி எக்ஸ்பிரஸ்)- புதன் காலை 9.05 மணி. 12868- புதுச்சேரி-ஹவுரா (ஹவுரா எக்ஸ்பிரஸ்)- புதன் பகல் 12.30 மணி. 12897- புதுச்சேரி- புவனேஸ்வரம் (புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்) புதன் மாலை 6.30 மணி.
கோவையில் இருந்து: 12625-திருவனந்தபுரம் -டில்லி (கேரளா எக்ஸ்பிரஸ்)- தினமும் இரவு 7.55 மணி. 13352-ஆலப்புழை -தன்பாத் (தன்பாத் எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 11.55 மணி. 12522-எர்ணாகுளம்- பிர்வானி (பிர்வானி எக்ஸ்பிரஸ்) - வெள்ளி காலை 10.10 மணி. 12969-கோவை-ஜெய்ப்பூர் (ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்) வெள்ளி காலை 9.15 மணி. 16323-திருவனந்தபுரம்- விஜயவாடா(ஷாலிமர் எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, ஞாயிறு அதிகாலை 1.25மணி
மதுரையில் இருந்து: 12641- கன்னியாகுமரி- நிஜாமுதீன் (திருக்குறள் எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 11.45 மணி. 12651- மதுரை- நிஜாமுதீன் (சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ்) - திங்கள், சனி இரவு 11.35 மணி. 12666- கன்னியாகுமரி-ஹவுரா (கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்)- சனி பகல் 12.35 மணி. 16787- திருநெல்வேலி-ஜம்முதாவி (ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, திங்கள் இரவு 7மணி. 14259- ராமேஸ்வரம்-வாரணாசி (வாரணாசி எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 8.05 மணி.(வழி: மானாமதுரை)
பிரார்த்தனை
பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
காட்டாரம், கேதாரம் என்ற புராணப்பெயர்களும் இவ்வூருக்கு இருந்துள்ளன. கிருஷ்ணாநதியின் மிக ஆழமான பகுதி இங்குள்ளது. அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஊர் அழிந்துவிட்டது. இப்போது, வயல்களும் காடுகளுமாக காட்சியளிக்கிறது. குறைந்த அளவு மக்களே வசிக்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்ல 600 படிகள் ஏற வேண்டும். சுயம்பு நரசிம்மரின் உருவம், ஒரு பாறையில் உள்ள இவரது உருவம் தெளிவில்லாமல் இருக்கிறது. தாயாரை செஞ்சுலட்சுமி என்கின்றனர். செஞ்சு என்றால் வேடுவச்சி. காட்டில் வேடுவர் இனத்தினர் வசித்ததால், தாயாருக்கும் அவர்கள் தங்கள் இனத்தின் பெயரையே சூட்டியுள்ளனர்.
வைரக்குளம்: இங்கு ஒரு காலத்தில் குளம் ஒன்றை வெட்டினர். அப்போது ஒரு ஊழியரின் காலில் ஏதோ இடித்து ரத்தம் வழிந்தது. இடித்த பாறையைச் சோதித்ததில், அது வைரப்பாறை எனத் தெரிய வந்தது. அந்தப்பகுதியை மேலும் தோண்டிய போது, அதனுள் சில சிலைகளும் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எனவே, இங்குள்ள நரசிம்மருக்கு வஜ்ராலயர் என்று பெயர் சூட்டினர். வஜ்ரம் என்றால் வைரம்.
தல வரலாறு:
11ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கேதவர்மா என்ற மன்னரின் பெயரால் இவ்வூருக்கு கேதவரம் என்ற பெயர் வந்தது. இவரது பக்கத்து நாட்டை ஆட்சி செய்த யாதவ மன்னர் ஒருவரின் கனவில், நரசிம்மர் தோன்றி கேதவரம் மலையில் ஓரிடத்தில் தான் இருப்பதை உணர்த்தினார். இந்தத் தகவலை கேதவர்மாவுக்கு தெரிவித்தார் யாதவமன்னர். கேதவர்மா மலையில் ஏறி சுயம்புவடிவ நரசிம்ம வடிவம் இருப்பதைப் பார்த்தார். உடனடியாக அங்கு கோயில் கட்டினார். அங்கு போதிய இடம் இல்லாததால், அடிவாரத்தில் ஒரு கோயில் கட்டி விழாக்களை நடத்தினார். அடிவாரக்கோயிலில் லட்சுமியுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.
இருப்பிடம் : குண்டூரில் இருந்து மெச்சர்லா செல்லும் ரோட்டில் 55 கி.மீ., தூரத்தில் பெலம் கொண்டா என்ற ஊர் வரும். இங்கிருந்து 25 கி.மீ., தூரத்தில் கேதவரம் உள்ளது. விலக்கில் இருந்து ஐந்து கி.மீ., நடக்க வேண்டும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
விஜயவாடா
அருகிலுள்ள விமான நிலையம் :
விஜயவாடா
தங்கும் வசதி :
விஜயவாடாவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.