அருள்மிகு காட்டு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
காட்டு வீரஆஞ்சநேயர் |
|
ஊர் | : |
தேவசமுத்திரம் |
|
மாவட்டம் | : |
கிருஷ்ணகிரி
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
அனுமன் ஜெயந்தி, ராமநவமி, நரசிம்ம ஜெயந்தி |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்குள்ள மூலவர் ஒரே கற்பாறை மீது செதுக்கப்பட்டவர் என்ற சிறப்பு பெற்றவர். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு காட்டு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்
தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி மாவட்டம். |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இங்கு தாயார் மகாலட்சுமி, லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் வீற்றிருக்கின்றனர். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
தேர்வில் அதிக மதிப்பெண் பெற, திருமணம் விரைவில் நடக்க, நோய்கள் குணமாக இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
அனுமனுக்கு வடைமாலை சாற்றி, வெண்ணெய் காப்பு, சந்தன காப்பு சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
மூலவரின் கர்ப்பகிரகமும், கோபுரமும், மகாலட்சுமி தாயாருக்கு கோயிலும் ஒரு பெரிய மண்டபத்தில் கட்டப்பட்டது. அதன் பின் தீபஸ்தம்பம் உள்ளடக்கிய இரண்டாவது மண்டபம் கட்டப்பட்டது. மூலவர் கோயிலுக்கு வலதுபுறம் லட்சுமி நரசிம்மரின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதனையொட்டி ஒரு மாடத்தில் யோகநரசிம்மர் வீற்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையிலிருந்து சித்தர் ஒருவர் இங்குள்ள ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றுள்ளார். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகரப் பேரரசின் மன்னன் கிருஷ்ண தேவராயரின் நல்லாட்சியின் கீழ் கிருஷ்ணகிரி பல சைவ, வைணவ கோயில்களைக் கொண்டு விளங்கியது. அப்போது கல் பாறைகளிலெல்லாம் ஆஞ்சநேயரின் வீரம் ததும்பும் உருவங்கள் செதுக்கப்பட்டன. அப்படி கற்பாறை மீது செதுக்கப்பட்ட ஓர் உருவத்திற்கு எழுப்பப்பட்டதே இந்த காட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். ஆஞ்சநேயர் சிறுவயதில் காட்டில் வளர்ந்ததாலும், இக்கோயில் ஆரம்பத்தில் வனமாக இருந்ததாலும் இங்குள்ள ஆஞ்சநேயர் காட்டு வீரஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்குள்ள மூலவர் ஒரே கற்பாறை மீது செதுக்கப்பட்டவர் என்ற சிறப்பு பெற்றவர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|