சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
தலபெருமை:
இங்கு கோயில் கர்ப்பகிரகத்திற்கு இடப்புறம் "மகம் வாசல்' என்ற வாசல் உள்ளது. கணவனை இழந்த பெண்கள் ஒரு வருடம் ஆன பிறகு அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு மகம் வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு அதன் வழியே சென்றுவிடுவர்.
தல வரலாறு:
வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி "நீவா' என்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது என்றும் கூறுவர்.
இது கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ளது. வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தர் பெண்ணாடகம் பிரளயகாலேஸ்வரரை தரிசித்து விட்டு, இத்தலம் வர விரும்பி வழியில் உள்ள மாறன்பாடி தலத்தில் தங்கினார். சம்பந்தர் வரும் வழியில் ஏற்பட்ட வருத்தத்தை கண்ட சிவன், அவர் செல்ல முத்துச்சிவிகையும், முத்துகொண்டையை தந்தருளினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.