பள்ளம் நிறைந்த பகுதியாக இருந்ததால் அப்பகுதியில் விவசாயம் செய்யாமலும், அருகில் உள்ள மீனவர்கள் கடல் தொழிலுக்கு சென்று தங்க முடியாமல் இருந்தனர். பொன்னன் என்பவர் அப்பகுதியில் உள்ள மணல் திட்டில் வசித்ததால் பொன்னன் திட்டு என அழைக்கப்படுகிறது.
ஆடிகடைசி வெள்ளி, விஜயதசமி, புரட்டாசி நவராத்திரி, மார்கழி 30 நாள் உதய கால பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மகா முத்துமாரியம்மன் திருக்கோயில்,
பொன்னந்திட்டு மற்றும் மற்றும் அஞ்சல்,
சிதம்பரம் வட்டம்,
கடலூர்- 608102.
போன்:
+91 - 77084 31799
பொது தகவல்:
கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில் முன் உள்ள மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். பலிபீடம், சிம்மம் மற்றும் 4 அடியில் குத்து விளக்கும் உள்ளது. கோயிலுக்குள் இடபக்கம் சுப்ரமணியர், வலப்பக்கம் விநாயகர் சிலைகள் உள்ளது. மேல் பக்கம் கஜலட்சுமியும் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக உள்ளதால் இங்கு பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக ஸ்ரீமுஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
தல வரலாறு:
நாடார் சமூகதத்தினர் குலதெய்வ வழிபாடு நடத்தி வந்தனர். முதலில் சிறிய கொட்டகை அமைத்து கல் வைத்து வழிபாடு நடத்தினர். காலப்போக்கில் சமூகத்தினர்கள் வரி வசூல் செய்து பொது இடத்தில் கோயில் கட்டியுள்ளனர். மேலும் கோயில் வல பக்கம் பிரச்சன்னப் பெருமாள் கோயிலும் கட்டியுள்ளனர். நாடார்களின் குலதெய்வமாக விளங்குவதல் பல்வேறுப் பகுதியில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர். 2016 ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இருப்பிடம் : சிதம்பரத்தில் இருந்து 14கி.மீ துõரத்தில் உள்ள கிள்ளை சென்று அருங்கிருந்து பொன்னந்திட்டிற்கு ஆட்டோவில் செல்லலாம் 3 கி.மீ., அல்லது பரங்கிப் பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து தெற்கே 2 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.