Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வலுப்பூரம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வலுப்பூரம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வலுப்பூரம்மன்
  அம்மன்/தாயார்: வலுப்பூரம்மன்
  ஊர்: வாமனஞ்சேரி
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தை மாதம் தேர்த்திருவிழா உற்சவம், அமாவாசை, பவுர்ணமி, சித்திரை புத்தாண்டு, ஆடி, 18 என அம்மனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.  
     
 தல சிறப்பு:
     
  முழுவதும் கல் வேலைப்பாடுகளுடன், கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம் என மூன்று நிலைகளில் கோவில் அமைந்துள்ளது. துõண்கள், மேற்கூரை தாங்கு துõண்களில், அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வலுப்பூரம்மன் திருக்கோவில் அலகுமலை கிராமம், திருப்பூர் மாவட்டம் வானவஞ்சேரி. திருப்பூர். 641 665  
   
போன்:
   
  +91 9791293091, 9842939034 
    
 பொது தகவல்:
     
  அம்மனுக்கு நேர் எதிரே, பலி பீடம் அருகில், அம்மனின் வாகனமான சிங்க வாகனம் உள்ளது. முன் மண்டப வலது புறத்தில், கன்னிமார், இடது புறத்தில், விநாயகர்  எழுந்தருளியுள்ளனர். வெளிப்பிரகாரத்தில், அம்மனின் குதிரை வாகனம், கருப்பராயன், துர்க்கை அம்மன் எழுந்தருளியுள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  வலிப்பு நோய் குணமாக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் அம்மனுக்கு வேண்டி, நோய் நிவர்த்தியானதும், உருவாரங்கள் செய்து வைத்தும், சேவல், ஆடு பலி கொடுத்தும், பறக்க விட்டும் நன்றிக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அதிசய தீபஸ்தம்பம் : இக்கோவிலுக்கு வெளியில், ஆலமரத்திற்கு அடுத்து, சற்று தள்ளி தீபஸ்தம்பம் அமைந்துள்ளது. இந்த தீபஸ்தம்பத்திலிருந்து, அம்மனை பார்த்தால் நேராக தெரியும் வகையில் அமைந்துள்ள அதிசயமான ஒன்றாகும்.

ஆலமரம் : அம்மனுக்கு எதிரே, மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. இங்கு, அம்மன் ஊஞ்சல் காணப்படுகிறது. இம்மரத்தில், திருமண தடை நீங்க தாலியை தொங்க விட்டும், குழந்தை பாக்கியம் வேண்டி, தொட்டில், வளையல்கள் அணிவித்தும், பக்தர்கள் வழிபடுகின்றனர். மேலும், பல்வேறு உருவாரங்கள் பக்தர்களால் காணிக்கையாக  செலுத்தப்படுகிறது. கால், கை, உடல் என பல்வேறு வடிவங்களில் உருவாரங்கள் காணப்படுகின்றன.
 
     
  தல வரலாறு:
     
  1,200 ஆண்டுக்கு முன்பு, சோழ நாட்டை ஆண்டு வந்த, விக்ரமசோழ மகாராஜாவின், மகள் மைக்குழலாலுக்கு, வலிப்பு நோய் ஏற்படுகிறது. சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் நோய் தீரவில்லை. நோய் தீர்க்க அனுபவம் வாய்ந்த பண்டிதர்களிடம் கேட்கிறார்; கொங்கு மண்டலத்தி, மேலைசிதம்பரத்திற்கு சென்றால், நோய் தீரும் என ஆலோசனை கூறுகிறார். மகளை அழைத்துக்கொண்டு, சேனைகள் சூழ, மன்னர் வருகிறார். வாமனஞ்சேரியில், தங்கியிருந்த போது, கனவில் தோன்றிய அம்மன், உனது மகள் நோய் தீர்க்கும் மகத்துவம் இங்கு உள்ளது. வேட்கோவரிடம் சென்று, திருநீறு வாங்கிக்கொள் என கூறுகிறார். அதே போல், இங்கு  அம்மனை வழிபட்டு, திருநீறு வாங்கி, மகளுக்கு பூசுகிறார்.  மணலில் மகளை வரைந்து, அற்புதம் நிகழ்த்துகிறார், அம்மன்; மகளுக்கு தீராத நோய் தீருகிறது. அதற்கு பிறகு, பச்சை மண் பிடித்து, வலுப்பூரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, மன்னர் வழிபடுகிறார்.

இவ்வாறு, வாமனஞ்சேரியில் சுயம்வுவாக எழுந்தருளி, அற்புதங்கள் நிகழ்த்திவருகிறார் வலுப்பூரம்மன். மக்களின் நோய் பிணி நீக்கும், அற்புத சக்தியாக அருள்பாலித்து வருகிறார். அக்கி உள்ளிட்ட, பல்வேறு நோய்கள் தீர்த்து வருவதாகவும், உடல் அங்கங்கள் பிரச்னைக்கு தீர்வு,  குழந்தை பேறு, திருமண தடை நீக்கும் அம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். வேண்டுபவர்களுக்கு, வேண்டுபவை அருளும், வலுப்பூரம்மன், நான்கு கரங்களில் ஆயுதம் ஏந்தி, நோய் அரக்கனை அழித்து, ஆனந்தம் அளிக்கும், சாந்த சொரூபியாக காட்சியளித்து வருகிறார். இன்றளவும், வலுப்பு நோயால் பாதித்து இங்கு வரும் பக்தர்களுக்கு, ஆறு வாரங்களில், நோய் நீங்கி விடுவதாக, நம்பிக்கை உள்ளது. தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: முழுவதும் கல் வேலைப்பாடுகளுடன், கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம் என மூன்று நிலைகளில் கோவில் அமைந்துள்ளது. துõண்கள், மேற்கூரை தாங்கு துõண்களில், அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar