சித்திரை மாதம் முதல் வாரம் காலையில் சூரிய ஒளி மூல வர் மீது விழுகிறது
திறக்கும் நேரம்:
காலை முதல் 8.00மணி முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை
முகவரி:
அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில்
தில்லைவிடங்கன் மற்றும் அஞ்சல் கிள்ளை வழி, கடலுார் மாவட்டம் 608102.
போன்:
+91 9442184411
பொது தகவல்:
கிழக்குப்பக்கம் வாயில், நுழைவு வாயில் முன் இடப்பக்கம் தல விருட்சமான வில்வம் மரம் உள்ளது. அருகில் நவக் கிரக மண்டம் ஒரு கலசத்துடன் உள்ளது. மகா மண்டபம் நுழைவு வா யில் முன் அமர்ந்த நிலையில் நந்தியும், அருகில் பலி பீடமும் உள்ளது. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். தெற் குப் பக்கம் பார்த்து அம்பாள் பர்வதாம்பாள் அருள் பாலிக்கிறார்.
கிரானைட் தரை தளம் வலது பக்கம் வள்ளி தெய்வானையுடன், சுப்பிர மணி யர், இடபக்கம் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். வடக்குப் பாக்கம் பார்த்து ஒரே நேர்க் கோட்டில் சமயக்கு ரவர்களும், மேற்கு பக்கம் பார்த்து சனிபகவான், சூரியன், சந்திரன் மற்றும் பைர வரும் ஒரே நேர்க்கோட்டில் அருள் பாலிக்கின்றனர். உள் பிரகாரத்தில் உத்திராட்ச பந்தலுக்கும் கீழ் மூலவர் அருள்பாலிக்கின்றார். வெளி பிரகாரத்தில் தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் தட்சிணாமூர்த் தியும், மேற்கு பக்கம் லிங்கோத்பவரும், வடக்கு பக்கம் பார்த்த வகை யில் துர்க்கையும், தெற்கு பக்கம் பார்த்த வகையில் சண்டிகேஸ்வரரும் அரும் பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விடங்கேஸ்வரரும், பர்வதாம்பாளும் விளங்குகின்றார்.
நேர்த்திக்கடன்:
நெய் தீபம், பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்கள் இக்கோவில்களுக்கு பெருமையாக உள்ளது.
தல வரலாறு:
பூலோக கைலாயம், இதய கமலம், ஆகாய ஸ்தலம், தரிசிக்க முக்தி தரும் ஸ்தலம் என்ற பல்வேறு சிறப்பு களுக்கு பெயர் பெற்ற ஆடல் அரசன் எம்பெருமான் ஸ்ரீ நடராஜரின் ஈசான திசையிலும், புகழ் பெற்ற தில்லை காளியின் இடைக்கண் பார்வையிலும் உள்ளது இத்திருக்கோவில். பிச்சாவரம் ஜமின் காலத்தில் பரி வட்டம் கட்டும் போது ஏற்பட்ட பாகு பாட்டில் பலர் மன உளச்சல் அடைந்தனர்.
அப்போது அப்பாசாமிப்பிள்ளை என்பவர் தனக்கு உரிய சிறப்பு கிடை க்காமல் இறைவனிடம் கூறி வருந்தியுள்ளார். அப்போது ஈசன் அவர் க னவில் தோன்றி நீ நினைக்கும் போதும், நினைக்கும் இடத்திலும் உன க்கு அருள் பாலிப்பேன் பிச்சாவரம் வனப்பகுதியில் ஒரு திவீல் தான் கேட்பாரற்று கிடப்பதாகவும் எடுத்து வந்து பூஜிக்குமாறு அசரரீயாக கூறி மறைந்துள்ளார். அதன் பின் தான் வாழ்ந்த இடமான சிதம்பரம்(தில்லை) கிள்ளை இபை ட்ட பகுதியில் உள்ள கிராமமான இங்குள்ள விடங்கேஸ்வரரை பற்றி நான்கு வருணத்தார்கள் இசை பாடி யதால் வான் வழியே சென்ற வரு ண பகவான் கீழ் இறங்கி வந்து வண ங்கியதால் வருணாபுரி என்றும், விடங்க முனிவருக்கு மோட்சம் கொடுத்ததால் தில்லை விடங்கன் என்ற பெருமைக்குரிய அந்த கிராமத்தில் சிவனுக்கு சிறிய கோவில் கட்டி விடங்கேஸ்வரர் என பெயர் சூட்டி வழிபாடு நடத்தியுள்ளார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சித்திரை மாதம் முதல் வாரம் காலையில் சூரிய ஒளி மூல வர் மீது விழுகிறது.