பெண்ணாடத்தில் ஒரே நேர்க்கோட்டில் நின்றகோலம், அமர்ந்தகோலம், சயன கோலம் ஆகிய நிலைகளில் பெருமாள் கோவில்கள் உள்ளது. அதில் நின்ற கோலத்தில் உள்ள பெருமாள் கோவில் சிதிலமடைந்துள்ளது. அதில், வீற்றிருந்த பெருமாள் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை8 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் கோவில்.
மேற்கு ரதவீதி, பெண்ணாடம் 606105 ,
திட்டக்குடி, தாலுக்கா, கடலுார் மாவட்டம்.
போன்:
+91 9659206577
பொது தகவல்:
மூலவர் வேத நாராயணபெருமாள் கிழக்கு திசை நோக்கியும், மகா மண்டபத்தில் உள்ள ராமர் சீத்தா லட்சுமண சமேத ஆஞ்சநேயர் சுவாமிகள் தெற்கு திசை நோக்கியும், ஆஞ்சநேயர் சன்னதிக்கும் ராமர் சீத்தா லட்சுமண சன்னதிக்கும் இடையே ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்புஆகும்.
பிரார்த்தனை
வேதம் கற்றுக்கொள்வோர் இங்கு வழிபட்டு துவங்குவது சிறப்பு. மூலவர் கல்விச் செல்வம் தரும் என்பதால் மாணவர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
குழந்தை, கல்வி, கடன், திருமண தடை நீங்க மஞ்சள் துணியில் தேங்காய் கட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும். பின்னர் பூஜைகள் நடத்தி அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
தல வரலாறு:
தேவ கன்னியர், காமதேனு, வெள்ளை யானை ஆகியோர் இங்குள்ள அழகிய காதலி அம்மன்
உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரை பார்த்து மயங்கி பூலோகத்தில்
தங்கிக்கொண்டனர். இவர்கள் ஏன் தேவ லோகத்திற்கு வரவில்லை என பெருமாள்
பூலோகத்திற்கு வந்து இறங்கிய இடமா இத்தலம் உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வீற்றிருந்த பெருமாள் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.