கோகுலஷ்ட்டமி, மூலநட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு, மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் பிறந்தநாள், அனுமன் ஜெயந்தி விழா, ஆவணி உறியடி விழா, மாசி மகம்.
தல சிறப்பு:
சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதுார் உள்ளதுடன், முழுக் குத்துறைக்கு தீர்த்த வாரியாக ஸ்ரீ முஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோவிலுக்கு பெருமை அத்துடன் சிதம்பரம் நடராஜர் தை அமாவாசையில் கிள்ளைக்கு வரும் போது இந்த கோவிலில் சிறப்பு வரவேற்பளிக்கப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
முகவரி:
அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோவில்,
கிள்ளை அஞ்சல், சிதம்பரம் வட்டம் - 608102, கடலுார் மாவட்டம்
போன்:
+91 7010326637, 9043375562, 9865831800
பொது தகவல்:
கிழக்குப்பக்கம் வாயில், நுழைவு வாயில் உயரத்தில் நான்கு துாண்கள் முகப்பு மண்டபம் மூன்று சிமெண்ட் கலசம், கீழே நின்று இடது கையில் கமண்டலத்தை தோளில் சுமர்ந்தும், வலது கையால் ஆசி வழங்கிய நிலையில் ஆஞ்சநேயர் அருள் பாலிப்புடன், நுழைவு வாயில் இடப்பக்கம் மடப்பள்ளி அதன் அருகில் 10 அடி உயரத்தில் 75 கிலோ எடையில் ஆலயமணி. வலது பக்கம் தீர்த்தக்கிணறு மற்றும் தல விருட்சமான துளசி செடிகள். மகா மண்டபத்தில் 50 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம்.
மகா மண்டபத்தில் இடபக்கம் வழியில் சென்று வலது பக்கம் வழியாக பிரகாரத்தை சுற்றி வந்தால் ‘ப’ வடிவ எழுத்து அமையும். கோவில் பின் பக்கம் வலது திசையில் நாகர், ராகு,கேது தனி சன்னதியிலும், அருகில் ஆஞ்சநேயர் வலது கையை உயர்த்தி, இடது கையை வலது கால் முட்டியில் வைத்துள்ளார்.
நுழைவு வாயில் மண்டபத்தில் இருந்து கருவறை நான்கு பக்கமும் எட்டு கருட ஆழ்வார்கள், தெற்கு பக்கம் ஆஞ்சநேயர் துளசிமாலை கழுத்தில் அணிந்து இடது கை மேல் வலது கையை வைத்தும், மேற்கு பக்கம் நின்ற நிலையில் கோபத்துடன் இரு கைகளாலும் தன் வயிற்றை பிளந்து காட்டுவது போன்றும், வடக்குப் பக்கம் அமர்ந்த நிலையில் அருள் புரிகின்றனர். முன் மண்டபம் 10 க்கு 10 அடி அளவிலும், கற்ப கிரகம் 7 க்கு 7 அடி அளவில் 6 செண்ட் இடத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
சஞ்சீவி மலையுடன் ஆஞ்சநேயர் அருள் பாதிப்பதால் நாள் பட்ட நோயாளிகள் தீராத நோய் உள்ளவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வட மாலை, துளசி மாலை பக்தர்கள் விருப்பத்திற்கு சிறப்பு அபிேஷகம்
தல வரலாறு:
மூல நட்சத்தித்தில் பிறந்த உப்புவெங்கடராயர் தன் பெற்றோர்களுடன் கிள்ளையில் வாழ்ந்தார், அவருடைய தந்தைக்கு காலில் சிறு காயம் ஏற்பட்டு, காய்ச்சல் அடைந்துள்ளார். அன்றைய தினம் அவர் கனவில் தோன்றிய சஞ்சீவிராயர், (தற்போது கோவில் உள்ள இடத்தில் இருந்த) ஒரு மூலிகை செடியை அரைத்து காயத்தில் கட்டுவதுடன், அந்த இலையை கஷாயம் வைத்து குடிக்கவும், மேலும் நோய் வயப்பட்டவர்களுக்கு நோயை தீர்ப்பதாகவும் அதற்கு சிறு கோவில் கட்டச் சொல்வி மறைந்துள்ளார். துாக்கத்தில் இருந்து விழித்த உப்பு வெங்கடராயர் தன் பெற்றோர்களிடம் விபரத்தை கூறியதன் பலனாக பெற்றோர்கள் மறு நாள் செய்து,நிவர்த்தி அடைந்தனர்.
அதன் பின் கீற்றுக் கொட்டைகை கட்டி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் இரண்டடி உயரத்தில் வாலில் மணியுடன் சஞ்சீவிராயர், ஒரு கையில் சஞ்சீவி மலையை துாக்கி வருவது போன்ற சிலை வடிவமைத்து, ராகவேந்திரசுவாமிகள், மத்துவாச்சாரியர் வழித்தோன்றலில் வந்த வாதிராஜர் என்பவர் சுவாமிசிலையை பிரதிஷ்ட்டை செய்தார். காலப்போக்கில் விமானத்துடன் கோவில் கட்டி, தரை தளம், மற்றும் மேற்கூரையும் கருங்கற்கள் கொண்டு கட்டினர். அன்று முதல் முக்கிய விழாக்கள் உள்ளிட்ட நாட்களிலும், தீராத நோய்க்கும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
ஆன்மிக சேவையாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கிள்ளையைச் சேர்ந்த வீரசுந்தரம் படையாட்சி என்பவர் வரி வசூல் செய்து சுற்று மதிற்சுவர் அமைத்தும், ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சஞ்சீவிராயர் சிலையை வெளி பிரகாரத்தில் வட மேற்குப் பகுதியில் பிரதிஷ்ட்டை செய்துள்ளார். நாள் பட்ட வியாதி உள்ளவர்கள் நேரில் வந்து அர்ச்சனை செய்து அங்கு வழங்கப்படும் பிரசாதத்தை முறைப்படி உட் கொண்டால் நோய் குணமடையும் என்பது ஐதீகம். இக்கோவிலில் கணேச பட்டாச்சாரியர்(மாற்றுத்திறனாளி) எந்த வித ஊதியமும் இல்லாமல் அர்ச்சனை செய்து வருகிறார். தற்போது உப்பு வெங்கடராயர் வழித்தோன்றலில் (ஒன்பது)9 வது தலைமுறையைச் சேர்ந்த முரளி, சுதிந்தர் பராமரித்து வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சிதம்பரம் நடராஜர் தை அமாவாசையில் கிள்ளைக்கு வரும் போது இந்த கோவிலில் சிறப்பு வரவேற்பளிக்கப்படுகிறது.