மாசி மகம், சித்திரா பவுர்ணமி மற்றும் ஆடிகடைசி வெள்ளி சிறப்பு திருவிழாவாக கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்,
நஞ்சை மகத்து வாழ்கை மற்றும் அஞ்சல்,
சிதம்பரம் வட்டம், கடலூர்-608102.
போன்:
+91 94424 26225
பொது தகவல்:
கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், முகப்பில் சூலம், பலிபீடம் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக விளங்குவதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தானியங்கள், காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்திக்கின்றனர்.
தலபெருமை:
குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமிகோயில், மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், கிழக்கே முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக வரும் ஸ்ரீமுஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
தல வரலாறு:
விவசாயத்தை பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்கிய காளியம்மன் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது. இக்கோயில் விவசாய அபி விருத்திக்காக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பொற்கொல்லர்கள் மற் றும் அனைத்து சமூகத்தினர்களும் குலதெய்வ வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். அம்மன் நோய் நொடிகளை நீக்கி நலம் காக்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.
சுற்றுப்பகுதி கிராமங்களில் நவக்கிரகம் உள்ள கோயிலாக விளங்கும் காளியம்மன் கோயில் அருகில் குடிகொண்டு விவசாயிகளுக்கு செல்வவளம் பெருக்குவதுடன், திருமணத்தடையை நீக்கி, புத்திரபாக்கியத்தை அளிக்கும் வல்லமைபடைத்தவராக விளங்குகின்றார்.