அருள்மிகு மாதவி வனேஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
மாதவி வனேஸ்வரர் |
|
உற்சவர் | : |
மாதவி வனேஸ்வரர் |
|
அம்மன்/தாயார் | : |
மங்களாம்பிகை |
|
தல விருட்சம் | : |
முல்லை |
|
தீர்த்தம் | : |
துர்வாசர் உண்டாக்கிய கிணறு |
|
ஊர் | : |
திருமுருகன்பூண்டி |
|
மாவட்டம் | : |
திருப்பூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
கைலாய மலை போலவே இங்கும் வாசலில் நந்தீஸ்வரர் இருப்பதால், இங்கு வருவோருக்கு கைலாயத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6:30 – 7:30 மணி, மாலை 4:00 – இரவு 7:30 மணி | | | | |
|
முகவரி: | | | | | |
மாதவி வனேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி, திருப்பூர் |
|
| | |
|
போன்: | | | | | |
+91 4296 – 276 107, 92825 22104, 94434 59074 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார் மகாவிஷ்ணு. அப்போது ஸ்வர்பானு என்னும் அசுரன் திருட்டுத்தனமாக தேவர்களுடன் சேர்ந்து அமிர்தம் பருகினான். அதை அறிந்த விஷ்ணு, அசுரனை இரு துண்டாக வெட்டினார். அமுதம் பருகியதால் அவனது உயிர் போக வில்லை. அசுரனின் தலைப்பாகம் ஒரு பாம்பின் உடலுடன் சேர்ந்து ராகுவாகவும், உடல் பாகம் பாம்பின் தலையோடு சேர்ந்து கேதுவாகவும் மாறின. இதில் கேது, பூலோகத்திலுள்ள மாதவி வனத்தில் தங்கி சிவனை வழிபட்டதன் பலனாக கிரகப்பதவியை அடைந்தது. கேது பூஜித்த சிவனே இத்தலத்தில் மூலவராக விளங்குகிறார்.
|
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
கேது தோஷம் தீர ஞாயிறன்று ராகுகாலமான மாலை 4:30 – 6:00 மணிக்குள் செவ்வரளி மாலை அணிவித்து, ஏழு முறை சுற்றி வழிபடுகின்றனர்.
| |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுகின்றனர். | | |
| |
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
முல்லை வனமான இங்கு மாலாதரன் என்னும் வேடன் வாழ்ந்தான். காட்டில் பூத்த முல்லை பூக்களைத் தொடுத்து மாலையாக்கி தன் கழுத்திலும், மனைவியின் கழுத்திலும் அணிந்து கொள்வான். மறுநாள் இருவரும் அதை வீசி விடுவது வழக்கம். இவ்வாறு அவர்கள் வீசிய பூமாலை, இங்கிருந்த சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்தன. அறியாமல் செய்த இப்புண்ணிய பலத்தால் அவர்கள் இருவரும் மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களே பிற்காலத்தில் இக்கோயிலைக் கட்டினார். மாதவி (முல்லை) வனத்தில் இருந்ததால் சுவாமிக்கு ‘மாதவி வனேஸ்வரர்’ எனப் பெயர் ஏற்பட்டது. மங்களாம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
கைலாய மலை போலவே இங்கும் வாசலில் நந்தீஸ்வரர் இருப்பதால், இங்கு வருவோருக்கு கைலாயத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|