அருள்மிகு திருக்கோளபுரீசுவரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
திருக்கோளபுரீசுவரர், பொய்யாமொழியீசர், சிவதருமபுரீசர் |
|
உற்சவர் | : |
திருக்கோளபுரீசுவரர் |
|
அம்மன்/தாயார் | : |
ஆத்மநாயகி |
|
தீர்த்தம் | : |
வற்றாத சுனை |
|
ஊர் | : |
திருக்கோளக்குடி |
|
மாவட்டம் | : |
சிவகங்கை
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம். |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இம்மலைக்கோவிலில் மிகவும் அபூர்வமாக மூன்று சிவன் சன்னதிகளும் ( மூன்று நிலைகளாக பூமியில் அந்தரம் ஆகாயம்) காணப்படுகிறது. மேலும் மலை உச்சியில் முருகன் கோவிலும்
உள்ளது. மலையின் கீழே பூமியில் பொய்யாமொழியீசர் அன்னை மரகதவல்லியோடு அருள்பாளிக்கிறார். மலையின் நடுவில் (அந்தரம்) சுயம்புமூர்த்தியாக சிவதருமபுரீசர் அன்னை சிவகாமவல்லியம்மை உடன் காட்சி தருகிறார். மலை மேலே (ஆகாயம்) குடவறை கோவிலில் இத்தல நாயகன் திருக்கோளபுரீசர் அன்னை ஆத்மநாயகியுடன் அருள்பாளிக்கிறார். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு திருக்கோளபுரீசுவரர் கோவில், திருக்கோளக்குடி, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
|
| | |
|
போன்: | | | | | |
+91 9345191870 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
திருப்புத்தூரிலிருந்து வடக்கே 20 கி.மீ. இக்கோயில் மலைக்கோயில் மீது குடவரைக் கோயிலாக காட்சியளிக்கிறது. அருகில் விநாயகரும், பின்புற மலைச்சரிவில் குகை போன்ற அறையில் விநாயகர் உருவமும் உள்ளன. படிகளேறி மேலே சென்றால் கோளஈஸ்வரர் திருவுருவம், மகாமண்டபம் முதலியவற்றைக் காணலாம், மலையின் உச்சியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இதற்கு அடைகோளஈசுவரர் கோயிலிலிருந்து இறங்கி கோயிலை வலம் வந்து பாறை மீதேறிச் சென்றால் ஆறுமுகப் பெருமாள் காட்சியளிக்கிறார். தினமும் இரண்டு கால பூஜை. ஆனி மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
கொலை கொள்ளை பசுவதை வேதத்தை பழித்தல் போன்ற தீய செயல்களை செய்தவர்கள் இத்தல இறைவனை வேண்டினால் நிச்சயமாக திருந்தி புது வாழ்வு பெறலாம்.
| |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செய்கின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
மலை உச்சியில் வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆலயம் உள்ளது. ஒரே மலையில் 4 கோவில்களை காண்பது அரிதான ஒன்று. இம்மலையில் பாறைகளுக்கிடையே வற்றாத சுனை உள்ளது. சுனைக்கு மேலேயுள்ள பாறையில் எப்பொழுதும் தேன்கூடு காணப்படுகிறது. அதிலிருந்து தேன் சுனையில் வடிந்து கொண்டே இருக்கிறது.அந்த சுனை நீரில்தான் சுவாமிகளுக்கு அபிசேகம் நடக்கிறது. மேலும் இச்சுனை நீரில் தவளைகள் வாழ்வது கிடையாது. இத்தலத்தில் திருப்பாறையிடம் முறையீடு செய்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும்.
கொலை கொள்ளை பசுவதை வேதத்தை பழித்தல் போன்ற தீய செயல்களை செய்தவர்கள் இத்தல இறைவனை வேண்டினால் நிச்சயமாக திருந்தி புது வாழ்வு பெறலாம். மிக அழகான இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் செவ்வூர் அருகே உள்ளது. மேலும் இந்த கோவிலில் வலம்புரி பிள்ளையார் மலையை குடைந்து இருப்பார் . இந்த கோவில் குன்றகுடி ஆதீனத்தின் பொறுப்பில் உள்ள கோவில். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
இந்த ஆலயம் கட்டும் பணி 8-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று
கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் பல கல்வெட்டுகள் மாறவர்மன்
திருப்புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆற்றிய
பணிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பதாக இருக்கிறது. எனவே திருக்கோளக்குடி
ஆலயத்தின் திருப்பணிகள், 13-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றிருக்கலாம் என்று
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த
வள்ளலான பாரி வேந்தன் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக
விளங்கியிருக்கிறது.
இந்த மலை மீது 4 ஆலயங்கள் இருக்கின்றன. அடிவாரம் 'பொய்யாமொழீசர் ஆலயம்',
அதற்கு சற்று மேலே 'சிவ தருமபுரீசர் ஆலயம்', மேல் பகுதியில்
'திருக்கோளபுரீசர் கோவில்', அதற்கும் கொஞ்சம் மேலே 'முருகப்பெருமான் ஆலயம்'
ஆகியவை காணப்படுகின்றன. ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு
வாய்ந்த தலமாகவும் திருக்கோளக்குடி உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதியை
'சிவபுரம்' என்றும், 'திருக்கோளபுரம்' என்றும், 'கன்னிமாநகரம்' என்றும்
அழைத்திருக்கிறார்கள். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இம்மலைக்கோவிலில் மிகவும் அபூர்வமாக மூன்று சிவன் சன்னதிகளும் ( மூன்று நிலைகளாக பூமியில் அந்தரம் ஆகாயம்) காணப்படுகிறது. மேலும் மலை உச்சியில் முருகன் கோவிலும்
உள்ளது. மலையின் கீழே பூமியில் பொய்யாமொழியீசர் அன்னை மரகதவல்லியோடு அருள்பாளிக்கிறார். மலையின் நடுவில் (அந்தரம்) சுயம்புமூர்த்தியாக சிவதருமபுரீசர் அன்னை சிவகாமவல்லியம்மை உடன் காட்சி தருகிறார். மலை மேலே (ஆகாயம்) குடவறை கோவிலில் இத்தல நாயகன் திருக்கோளபுரீசர் அன்னை ஆத்மநாயகியுடன் அருள்பாளிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|