புரட்டாசி, மார்கழி மாதம் முழுவதும் இங்கு திருவிழாதான். இது தவிர கோகுலாஷ்டமி, ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், பங்குனி உத்திரம், வருடப்பிறப்பு, அனுமன் ஜெயந்தி, ஆடிப்பூரம் இப்படி மாதம் தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
திருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை
இத்தலத்தில் செலுத்தலாம்.
இவரை திருப்பதியின் அண்ணன் என்பார்கள்.
திறக்கும் நேரம்:
காலை7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,
புதுப்பாளையம் - 607 001
கடலூர் மாவட்டம்.
போன்:
+91-4142- 295115, 94432 03257
பொது தகவல்:
கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் அருள் பாலிக்கும் ராஜகோபாலசுவாமி திருத்தலத்தைத்தான் தமிழக திருப்பதி என்கிறார்கள். இங்கு புரட்டாசி மாதத்தில் ஒரு நாள் இந்த பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மூலவர் ராஜகோபாலசுவாமி. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் செங்கமலவல்லி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் உள்பிரகாரங்களில் ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், ஆண்டாள், ராமர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
நினைத்த காரியம் கைகூட இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
இத்தலத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் தினம் ஒரு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவகிந்திபுரம் பெருமாளின் தம்பியாக இவரை வணங்குகிறார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்றது.
தல வரலாறு:
இத்தலத்திற்கு ஒரு முறை வந்து தரிசனம் செய்தாலோ, அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகிறது. ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், வைராக் கியம் என ஐந்து கல்யாண குணங்களுடன் இத்தல பெருமாள் அருள்பாலிக்கிறார். எனவேதான் இவரை தரிசித்த மாத்திரத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி தருகிறார். நினைத்த காரியத்தை உடனே முடித்து தரும் இந்த பெருமாள் கடலூர் மாவட்டத்தின் தலைவனாக விளங்குகிறார். இங்குள்ள அனுமன் அவருக்கே உரிய சிறப்பாக ராமரின் தூதுவனாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:திருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை இத்தலத்தில் செலுத்தலாம். இவரை திருப்பதியின் அண்ணன் என்பார்கள்.