Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாதேவர்
  அம்மன்/தாயார்: பார்வதி
  ஊர்: திருவைராணிக்குளம்
  மாவட்டம்: எர்ணாகுளம்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  வருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம்: இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே மடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல். அங்கு சென்று பார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், ""அம்மா தாயே! ஜகன்மாதா'என கூவி அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,""இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,""தாயே! என்னை மன்னித்து, இங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான். மனமிறங்கிய தேவி, ""சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை வேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள். அதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை அடைக்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 4.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவைராணிக்குளம் - 683 580. வெள்ளாரப்பிள்ளி தெற்கு போஸ்ட், ஸ்ரீமூலநகரம் வழி, ஆலுவா தாலுகா, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா.  
   
போன்:
   
  +91 484-260 0182; 260 1182 
 
பிரார்த்தனை
    
  திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள், பிரிந்த தம்பதியினர் இந்த நாட்களில் அம்மனை தரிசித்து பலனடைகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். 
    
  தல வரலாறு:
     
  தற்போது கோயில் இருக்கும் பகுதியில் முன் காலத்தில் வெடியூர், அகவூர், வெண்மணி எனும் மூன்று நம்பூதிரி குடும்பங்கள் இருந்தது. இந்த மூன்று குடும்பங்களுக்கும் சொந்தமானது தான் திருவைராணிக்குளம் மகாதேவர் கோயில்.

அகவூர் மனையின் மூத்த நபருக்கு "தம்பிராக்கள்' (சிற்றரசர்) என்ற பட்டமும் உண்டு. இவர்கள் குடும்பத்தில் அகவூர் சாத்தன் என்ற ஞானி உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கல்லால் செய்த ஓடத்தில் அகவூர் மனையில் உள்ளவர்களை உட்கார வைத்து தினமும் ஆற்றைக்கடந்து அங்கிருந்த மகாதேவரை தரிசிக்க உதவி வந்தார்.

ஒரு முறை அகவூர் தம்பிரான் ஒருவர், ""மகாதேவா! வயதான காரணத்தினால் உன்னை வந்து தரிசிக்க மிகவும் சிரமமாக உள்ளது. இருந்தாலும் உன்னை தரிசிக்காமல் தண்ணீர் கூட அருந்துவதில்லையே,'' என முறையிட்டார். அன்றைய தினம் தரிசனம் முடித்து தான் கொண்டு வந்திருந்த ஓலைக்குடையை எடுக்கும் போது, குடை மிகவும் கனமாக இருப்பதாக உணர்ந்தார். இதுபற்றி தன் உதவியாளர் சாத்தனிடம் கூறிய போது, "பரவாயில்லை' என்று மட்டும் கூறினார். தன் வீடு வரும் முன் சற்று ஓய்வு எடுப்பதற்காக கரையில் இறங்கிய தம்பிரான் அங்கு தன் குடையை வைத்தார். ஓய்வு எடுத்த பின் அந்த குடையை எடுத்த போது, குடை மிகவும் எளிதாக இருப்பதை உணர்ந்தார். இதுபற்றியும் சாத்தனிடம் கூறினார். அதற்கும் சாத்தன் "பரவாயில்லை' என கூறினார்.

சில நாட்களுக்கு பின் அப்பகுதியில் வசித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தன் கதிர் அரிவாளை அங்கிருந்த கல்லில் தீட்டினார். அந்த கல் இருந்த இடத்தில் தான் தம்பிரான் சில மாதங்களுக்கு முன் ஓய்வெடுப்பதற்காக தன் குடையை வைத்து எடுத்தார். பெண் அரிவாளை கல்லில் தீட்டியதும் அந்த கல்லில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதைக்கண்டதும் அவள் மயங்கி விழுந்தாள். இது குறித்து பெண்ணின் உறவினர்கள் தம்பிரானிடம் தகவல் கூறினர். தம்பிரானும் சாத்தனிடம் விபரம் கேட்டார். அதற்கு ""தம்பிரானே! உங்களுக்கு அருள்பாலிப்பதற்காக இறைவன் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இவ்விடத்தில் தான் நீங்கள் முன்பு ஒரு முறை கோயிலுக்கு சென்று வரும்போது உங்களது குடையை வைத்தீர்கள். இறைவன் குடை மூலமாக வந்து இங்கு அருள்பாலிக்கிறார், ''என்றார். மகிழ்ச்சி அடைந்த தம்பிரான் இவ்விடத்தில் சிவலிங்கத்தையும், பார்வதியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம்: இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே மடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல். அங்கு சென்று பார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், ""அம்மா தாயே! ஜகன்மாதா'என கூவி அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,""இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,""தாயே! என்னை மன்னித்து, இங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான். மனமிறங்கிய தேவி, ""சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை வேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள். அதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை அடைக்கப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar