Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீ பூவராகன்
  உற்சவர்: ஸ்ரீயக்ஞவராகன்
  அம்மன்/தாயார்: அம்புஜவல்லி
  தல விருட்சம்: அரசமரம்
  தீர்த்தம்: நித்யபுஷ்கரணி
  ஊர்: ஸ்ரீமுஷ்ணம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசி மகம் பிரம்மோற்சவம் -10நாட்கள் திருவிழா - மாசிமாதம் பரணி நட்சத்திரத்தன்று தொடங்கும்.இந்த உற்சவத்தில் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் முன் தைக்கால் கிராமத்தில் ஒரு நவாப் அடக்கம் செய்யப்பட்ட மசூதி வழியாக பெருமாள் எழுந்தருள்வதும், மசூதி மேட்டில் மேள தாளங்களுடன் பூசையை ஏற்றுக்கொள்வதும் நவாப்பின் அரண்மனை வரையில் எழுந்தருள்வதும் ஒரு சிறப்பு. சித்திரை பிரம்மோற்சவம் - 10 நாள் தேர் தெப்பம் - சித்திரை மாதத்தில் ஸ்ரீ முஷ்ணத்திலேயே நடைபெறுவது ,ஒன்பது நாட்கள் பகல், இரவு பெருமாள் வீதிக்கு எழுந்தருள்கிறார். ஒன்பதாவது நாள் மட்டையடி உற்சவம் விசேஷமானது. சித்ராபவுர்ணமி அன்று நண்பகலுக்கு மேல் புஷ்கரணியில் தீர்த்தவாரி. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் , பவுர்ணமி, அமாவாசை , மாதப்பிறப்பு இந்த நாட்களில் யோக நரசிம்மசுவாமி பிரகாரத்தில் எழுந்தருள்கிறார். அவதாரதினமாகிய சித்திரை மாத ரேவதியில் பூவராகன் எழுந்தருள்கிறார். வைகாசி விசாகம் - உற்சவர் கருடவாகனம் ஆடிப்பூரம் - ஆண்டாள் உற்சவம் ஆவணி - பத்துநாள் ஸ்ரீ ஜெயந்தி, உறியடி புரட்டாசி - பெருமாள் தாயார் நவராத்திரி கொலு ஐப்பசி - தீபாவளி உற்சவம் கார்த்திகை - திருக்கார்த்திகை சொக்கப்பனை மார்கழி - பகல் பத்து, இராப்பத்து, ஆண்டாள் நீராட்டு வைகுண்ட ஏகாதசி - யக்ஞவராகன் வீதி உற்சவம், கருடசேவை தை சங்கராந்தி - யக்ஞவராகனுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் மாட்டுப்பொங்கல் - பாரிவேட்டை தைப்பூசம் - தீர்த்த உற்சவம் பங்குனி உத்திரம் - பெருமாள் தாயார் திருக்கல்யாணம் - திரு ஊரல் உற்சவம்  
     
 தல சிறப்பு:
     
  இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தானே தோன்றிய மூர்த்திகளை கொண்ட வைணவத் தலங்கள் எட்டு. 1. ஸ்ரீ ரங்கம் 2.ஸ்ரீ முஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை 5. சாளக்கிராமம் 6. புஷ்கரம் 7. நைமிசாரண்யம் 8. பத்ரிகாச்ரமம். ஸ்ரீ பூவராகசுவாமி சன்னதி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம்- 608 703 கடலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4144-245090 
    
 பொது தகவல்:
     
 

அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.


கோரைக்கிழங்கு பிரசாதம்:


ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி கோவில் சிறப்பு முஸ்தா சூரணம் என்கிற கோரைக்கிழங்கு பிரசாதம்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் பன்றி அவதாரம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது அவதாரத்திற்கு கோரைக்கிழங்கு மிகவும் பிடித்தமான உணவு என்பதால் கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

தயாரிக்கும் முறை. :

கோரைக்கிழங்கு,
அரிசி மாவு,
பூரா சக்கரை (குழவு சீனி),
ஏலக்காய் பொடி,
நெய்
முதலியவற்றைக்கொண்டு தயார் செய்யப்படுகிறது.

வழங்கப்படும் நேரம் :
தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் முடிந்த பின்னர் கோரைக்கிழங்கு லட்டு
(முஸ்தா சூரணம்) பிரசாதமாக வழங்கப்படுகிறது.

லட்டு ஒன்றின் விலை 20 ரூபாய்.

கோவில் பூஜை விபரம் :

தினமும் கோவிலில் 6 கால பூஜை நடக்கிறது.

முதல் கால பூஜை நேரம் 9 மணி நைவேத்யம் : மிளகு சாதம்
இரண்டாம் கால பூஜை நேரம் 9.30 மணி நைவேத்யம் : சுத்த அன்னம்
மூன்றாம் கால பூஜை நேரம் 12.30 மணி நைவேத்யம் : சுத்த அன்னம்
நான்காம் கால பூஜை நேரம் மாலை 6 முதல் 6.30 வரை நைவேத்யம் : தோசை
ஐந்தாம் கால பூஜை நேரம் இரவு 8 மணி நைவேத்யம் : சுத்த அன்னம்
ஆறாம் கால பூஜை நேரம் இரவு 8.30 மணி நைவேத்யம் : சக்கரை பொங்கல்

மேலும் விபரங்களுக்கு
ராஜாமணி பட்டாச்சாரியார் செல் : 99 524 21 072 (இரவு 9 மணிக்கு மேல்) பிரசாதம் செய்து தருபவர்
ரகுநாதன் பட்டாச்சாரியார் செல் : 87 785 16 498 (இரவு 9 மணிக்கு மேல்)



 
     
 
பிரார்த்தனை
    
  ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன.

குரு, ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்கள் பிரார்த்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகிறார்கள்.இவை தவிர சுவாமிக்கு திருமஞ்சனம், உலர்ந்த தூய வெள்ளாடை சாத்துதல், அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள்.பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். வசதி படைத்தோர் அன்னதானம் செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். அந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி ஆகும். அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும்.

வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜ வல்லித் தாயாரின் தோழிமார்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சுவாமிக்கு தீபாரதனை செய்வித்து, பிறகு கற்பூர ஆரத்தியுடனும், சுவாமி பிரசாதத்துடனும் நவாப் அரண்மனைக்குள் சென்று அங்கு பட்டா சாலையில் உள்ள அலமாரியில் வைக்கிறார்கள். பின் அரண்மனை வாசலில் நின்றுகொண்டிருக்கும் நவாப் சந்ததியரிடம் தெரிவித்த பிறகு சுவாமி கிள்ளை மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு, புஷ்பப்பல்லக்கில் வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் மசூதியின் பக்கம் எழுந்தருள்கிறார். இப்படி ஒரு வைபவம் எங்கும் காணப்படாத அற்புதமாக உள்ளது. மாசிமாத பிரம்மோற்சவம் இந்து, முகமதியர் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இன்றும் விளங்கி வருகிறது.

பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் இங்கு வழிபட்டு நற்பலன் அடைந்தனர். பன்றி வடிவில் சுவாமி இருப்பதால் அவருக்கு விருப்பமான கோரைக்கிழங்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில், அவ்வூர் வழியாகச் சென்றார், மத்வ மதத்தைச் சார்ந்த யாத்ரிகர் ஒருவர். அவர், முஷ்ணத்திற்குச் சென்று பூவராக ஸ்வாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் அவருக்கு நவாப்பற்றி தெரியவரவே, சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க, நவாப் பூரண குண மடைந்தாராம். அது முதல் நவாப், பூவராகப் பெருமானிடம் பக்தி கொண்டு, அவருக்குத் தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்கு சுவாமி எழுந்தருளும் போது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மாணம் செய்து, அங்கு உற்சவம் சிறப்பாக நடைபெற ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தார். இதனைத் தொடர்ந்து பரிபாலிக்க தர்ம ஸ்தாபனம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இன்றும் முஷ்ணம் தலத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்ம உற்சவத்தில் பூவராக சுவாமி தீர்த்தவாரிக்கு கிழக்கு சமுத்திரத்திற்கு எழுந்தருளும்பொழுது, முகமதியர்கள் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே நுழைந்து வீதியில் ஊர்வலமாக வருவது வழக்கம். அப்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசைகளுடன் எதிர்கொண்டு அழைத்து நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் மேல்புறம் வாசல் எதிரில் சுவாமியை நிறுத்தி மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாரதனை செய்விக்கின்றனர். பின்னர் சுவாமி கோயில் சிப்பந்திகள் கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகிறார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar