கேரளாவின் 108 சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
மூலவரான சிவலிங்கம் மூன்றடி உயரம் உள்ளது. மூன்று பெரிய கண்கள் இருக்கின்றன. தங்க கவசம் சார்த்தப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில்,
தளிப்பரம்பா, கன்னூர் மாவட்டம் ,
கேரளா மாநிலம்.
போன்:
-
பொது தகவல்:
இந்த கோயிலின் அருகிலுள்ள கஞ்சிராகாட் என்ற இடத்தில் வைத்தியநாதர் கோயிலும், திருச்சாம்பரம் என்ற இடத்தில் கிருஷ்ணன் கோயிலும் உள்ளன.
பிரார்த்தனை
கர்ப்பஸ்திரீகள் ஸ்ரீராஜராஜேஸ்வரர், வைத்தியநாதர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய மூவரையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால், பிறக்கும் குழந்தை நல்ல குணம், அறிவு, புகழ் கிடைக்கப்பெற்று நோயற்ற வாழ்வு வாழும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த கோயிலில் சிறிய சட்டியில் நெய் ஊற்றி தருகின்றனர். பக்தர்கள் அதனை கர்ப்பகிரக படிக்கட்டில் வைத்து வழிபடுகின்றனர். சமோரிய அரசர் ஒருவர் இங்குள்ள சிவனை வழிபட்டு அப்படியே மூலவருடன் ஒன்றிவிட்டார். எனவே, அவரது வம்சாவளியினர் எவர் மரணமடைந்தாலும், முதலில் இந்த மரண செய்தியை ராஜராஜேஸ்வரர் கோயிலுக்கு அறிவிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
பெண்களுக்கான அனுமதியில் மாற்றம்: இந்த கோயிலில் பெண்கள் பகல் மற்றும் மாலை நேரங்களில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இரவு எட்டுமணிக்கு நடக்கும் அத்தாழ பூஜைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தாழ பூஜை முடிந்தபிறகு சிவன் பார்வதியுடன் சேர்ந்து அருளுவதால் அந்த சமயம் மட்டுமே பெண்கள் கோயிலின் உள்ளே வந்து வழிபடலாம். 15 நிமிடம் மட்டுமே இந்த அனுமதி உண்டு. இரவு 8.30 மணிக்கு கோயில் மூடப்பட்டு விடும்.
தல வரலாறு:
சிவனுக்குரிய அனைத்து பெயர்களிலும் உயர்ந்தது ராஜராஜேஸ்வரர். கேரளாவின் 108 சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சிவலிங்கம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
மகரிஷி மாந்தாடா என்பவர் சிவனை குறித்து தவம் செய்து சிவனால் அளிக்கப்பட்ட ஒரு சிவலிங்கத்தைப் பெற்றார். மயானம் இல்லாத இடத்தில் பிரதிஷ்டை செய்யும்படி சிவன் உபதேசிக்கவே, எல்லா இடங்களிலும் தேடி கடைசியாக தளிபரம்பா என்ற இந்த புனித தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். மகரிஷியின் மறைவுக்கு பின் அந்த சிவலிங்கம் பூமியில் மறைந்துவிட்டது. மகரிஷியின் மகன் முசுகுந்தன் என்பவன், தன் தந்தையை போன்று சிவனை குறித்து தவம் செய்து சிவனது அருளால் மற்றொரு சிவலிங்கம் கிடைக்கப்பெற்று, அதனை வழிபட்டு வந்தான். அவனது காலத்திற்கு பிறகு, அந்த லிங்கமும் பூமியில் மறைந்துவிட்டது. சில நூற்றாண்டுகளுக்கு பிறகு, சதஸோமன் என்னும் அரசன் அகத்திய முனிவர் உபதேசப்படி சிவனைக்குறித்து தவம் செய்தான். அவனுடைய பக்திக்கு இரங்கி, சிவன் தந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயமும் கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கேரளாவின் 108 சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மூலவரான சிவலிங்கம் மூன்றடி உயரம் உள்ளது. மூன்று பெரிய கண்கள் இருக்கின்றன. தங்க கவசம் சார்த்தப்பட்டுள்ளது.
இருப்பிடம் : கோழிக்கோட்டை அடுத்துள்ள கன்னூரிலிருந்து (முந்தைய கண்ணனூர்) 25 கி.மீ. சென்றால்
தளிபரம்பாவை அடையலாம். கன்னூரில் இருந்து நேரடி பஸ் இருக்கிறது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கன்னூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
கோழிக்கோடு
தங்கும் வசதி :
கண்ணனூரில் உள்ள விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.