Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: லலிதா திரிபுரசுந்தரி
  ஊர்: நாகலூர்
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமியன்று, மாலை 4 மணி முதல் சிறப்பு பூஜை மற்றும் தேர்பவனி உண்டு. நவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  மகாமேரு வடிவத்திலேயே கோயில் அமைந்திருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில் நாகலூர், ஏற்காடு, சேலம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4281- 291 241 
    
 பொது தகவல்:
     
  கிரானைட் கற்களால், 42 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட மஹாமேருவின் உள்ளே, மூலவராக லலிதா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கிறாள். கோபுரத்தின் மூன்று திசைகளிலும், ஆகம விதிப்படி சப்தமாதர்களின் மூவரான பிராஹ்மி, வைஷ்ணவி, கவுமாரி ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பிரகாரத்தில் தேக்கு மரத்தினால், கலைநயத்துடன் மயில்மீது அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவி, விஸ்வரூப விஷ்ணு, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகியோரின் ஆள் உயர சிலைகள் பிரமிக்க வைக்கிறது. ஈசான்ய மூலையில் தட்சணாமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  நினைத்த காரியம் நிறைவேற, காரியத்தடை நீங்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

பூஜைகள்: ஆகம விதிப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில், அம்பாளுக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

கோயில் உருவான விதம்: ஸ்ரீ சக்ரத்தில் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன. அதில் உள்ள, 9 ஆவரணங்களை உருவப்படுத்தும்போது, மகாமேருவாக காட்சியளிக்கிறது. மகாமேருவை சரியான திசையில், சரியான முறையில் பிரதிஷ்டை செய்யும் போது, அந்த இடத்தில் பிரபஞ்சத்தின் (உலக) சக்தி குவியும். தியானம் பழகாதவர்கள் கூட அதன் மூலம் கிடைக்கும் அமைதியை இங்கு உணர முடியும்.

 
     
  தல வரலாறு:
     
  சக்தியில்லையென்றால் எதுவும் இயங்காது. உலகில் முதன்முதலில் தோன்றியவள் அன்னை ஆதி சக்தி, அவளிடம் இருந்தே, படைத்தல், காத்தல், அழித்தல் பணிகளைப் பிரம்மா, விஷ்ணு, சிவன் வடிவில் இருந்து செய்கிறாள் என அம்பாள் உபாசகர்கள் கூறுகின்றனர். உலகமெங்கும் வியாபித்துள்ள சக்தியை வணங்குவதற்கு உருவம் வேண்டுமென மும்மூர்த்திகளும் கேட்டனர். ஆதி பராசக்தியே முன்வந்து, தன் அம்சமாக ஸ்ரீசக்ரத்தையும், அதன் வடிவமான மகாமேருவையும் (மலை) வழங்கினாள். இப்படி ஆதிபராசக்தியின் அம்சமாக உள்ள ஸ்ரீசக்ரத்தை கோயில்கள் மட்டுமின்றி, வீடுகட்டும்போது கூட பிரதிஷ்டை செய்வது வழக்கமாக உள்ளது. ஸ்ரீ சக்ரத்துக்கு உருவம் கொடுக்கும் போது, அது மஹாமேருவாக உருவெடுக்கிறது. அம்மனின் காலடியில் சிறிய அளவில் பஞ்சலோகத்தில், மகாமேரு இருக்கும். ஆனால், மகாமேரு வடிவத்திலேயே ஒரு கோயில், சேலம் மாவட்டம், ஏற்காடு அருகேயுள்ள நாகலூரில் அமைந்துள்ளது. அமைதியான
சூழலில், தென்றல் வீசும் ஆரோக்கியமான இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் சென்று வந்தால் மனஅமைதி கிடைக்கும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மகாமேரு வடிவத்திலேயே கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar