Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாகணபதி(அஷ்ட கணபதி-8) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மகாகணபதி(அஷ்ட கணபதி-8) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாகணபதி
  ஊர்: ராண்ஜன்கோண்
  மாவட்டம்: ராண்ஜன்கோண்
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  திரிபுர பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள மகாகணபதி இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாகணபதி திருக்கோயில் ராண்ஜன்கோண்.  
   
    
 பொது தகவல்:
     
  மகாகணபதி ஆலயம் கிழக்கு திசை நோக்கியுள்ளது. ஆலயத்தை பெருங்கதவுகள் அலங்கரிக்கின்றன. ஜெய, விஜய என துவார பாலகர்கள் இருபுறங்களிலும் உள்ளனர். நீண்ட கோயில் பிராகாரத்தில் மகா கணபதி புராணம் கண்ணைக் கவரும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள மகாகணபதிக்கு அபிஷேக, ஆராதனை செய்து வேண்டிக் கொள்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  மணிப்பூர் என்று முன்னர் வழங்கப்பட்ட அவ்விடம் இன்று ராண்ஜன் கிராமம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி அன்று திரிபுராசுரன் வதம் நிகழ்கிறது. அது திரிபுரி பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சதுர்த்திகளுடன் திரிபுரி பவுர்ணமி இங்கும், சில விநாயகர் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மகாகணபதி நீண்ட நெற்றியுடன் காணப்படுகிறார். இவர் இடஞ்சுழிப் பிள்ளையார். ரித்தி சித்தியர் மகா கணபதியின் இருபுறங்களிலும் வீற்றுள்ளனர்.  
     
  தல வரலாறு:
     
 

திரேதா யுகத்தில் நிகழ்ந்த கதை இது. கணபதியின் மூல மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்சமதா. அந்த மந்திரத்தைத் தொடங்கும் முன் கிரித்சமதாவின் நாமமும் உச்சரிக்கப்படுகிறது. தாயாரின் சாபத்தால் அசுர குணமுள்ள ஆண்குழந்தை அவருக்குப் பிறந்தது. கிரித்சமதாவின் தும்மலிலிருந்து ஜனனம் எடுத்த உயிர் என்று அதை புராணங்கள் தெரிவிக்கின்றன. அக்குழந்தை உங்கள் உடலிலிருந்து உதித்ததால் நான் உங்கள் மகனாகிறேன். வளர்ந்து உரிய பருவம் அடைந்ததும் மூவுலகையும் வெல்ல என்னை ஆசிர்வதியுங்கள் ! என்று தந்தையை வணங்கி நிற்க, அதனால் கிரித்சமதா சற்று தடுமாறுகிறார். பின்னர் கணானம் த்வாம் கணபதி ஹவாமஹே என்ற மந்திரத்தை மகனுக்கு உபதேசித்து, அவனது மனதை பக்தி மார்க்கத்தில் செலுத்த முயற்சிக்கிறார். அந்த மந்திரத்தை ஜபித்த கிரித்சமதாவோ கஜானனனை நினைந்து பல்லாயிரம் வருடங்கள் கடுந்தவம் புரிந்தான். அவனது தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவனுக்குக் காட்சி தந்தார். அனைத்து உலகும் எனது வசம் ஆகவேண்டும். மனித, யட்ச, தேவ, கந்தர்வர் அனைவரும் என் ஆணைக்குக் கட்டுப்படவேண்டும். எனது இச்சைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் ! என, கிரித்சமதாவின் மகன் விநாயகரிடம் வேண்டினான். வெள்ளி, தங்கம், இரும்பு உலோகங்களை மூலமாகக் கொண்ட மூன்று நகரங்கள் உனக்குக் கிடைக்கும். அவை உன்னிடம் இருக்கும்வரை உன்னை எவரும் வெல்ல முடியாது. உனது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சிவபெருமான் மட்டுமே உன்னை வெல்ல வல்லமை படைத்தவர். திரிபுராசுரன் என்ற பெயருடன் நீ இனி அழைக்கப்படுவாய்! என்று விநாயகர் திரிபுராசுரனுக்கு வரமளித்து மறைந்தார்.

விரைவில் மூவுலகங்களும் திரிபுராசுரனின் கட்டளைக்கு அடிபணிந்தன. சண்டன், பிரசண்டன் என்று தனது மைந்தர்களை உருவாக்கிய திரிபுராசுரன், பிரம்மலோகத்தையும் விஷ்ணுலோகத்தையும் அவர்களுக்கு முறையே அளித்தான். செய்வதறியாது திகைத்து நின்ற தேவர்களை நாரதர் அணுகினார். திரிபுராசுரனின் வரலாற்றை அவர்களுக்கு விளக்கிய நாரதர், விநாயகரை பூஜிக்குமாறு அவர்களிடம் கூறினார். தேவர்கள் விநாயகரை ஆராதித்தனர். அவர்கள் முன் தோன்றிய விநாயகர், ஈசன் மூலம் அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண உறுதியளித்தார். அந்தணர் வேடம் பூண்டு விநாயகர் திரிபுராசுரனின் சபைக்குச் சென்றார். ராஜனே ! என் பெயர் கலாதர். அறுபத்து நான்கு கலைகளிலும் எனக்குத் தேர்ச்சியும் பயிற்சியும் உண்டு ! உனது புகழ் கேட்டு உன்னைக் காண வந்தேன் என்றார். பண்டிதரே! உமது கலைகளின் ஆற்றலை எமக்கும் காண்பியுங்கள் ! விரும்பிய சன்மானம் அளிக்கப்படும் ! என்றான் அசுரன்.

திரிபுராசுரனின் இந்த வாக்குறுதிதான் அந்தணர் வடிவில் சென்ற விநாயகருக்குத் தேவையாக இருந்தது. மூன்று வானூர்திகளை திரிபுராசுரனுக்கு அளித்த விநாயகர், அதன் மூலம் அவன் மூன்று உலகிற்கும் செல்ல முடியும் என்பதையும் தெரிவித்தார். அசுரனின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்ட விநாயகர் அதற்கு ஈடாக சிவபெருமானிடம் உள்ள சிந்தாமணி விக்ரகத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்ட திரிபுராசுரன் ஈஸ்வரனிடம் தன் தூதுவனை அனுப்பினான். அசுரனின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் ஏற்கெனவே சிவ, பார்வதி கைலாசத்தைவிட்டு மந்தார மலையில் குடியேறி இருந்தனர். அசுரனின் இந்தத் தூது ருத்ரரின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. சிந்தாமணியைத் தர மறுத்தார். அசுரனுக்கும், தேவர்களுடன் கூடிய ஈஸ்வரனுக்கும் இடையே கோர யுத்தம் துவங்கியது. தேவ, சிவ கணங்கள், ஏன் ஈஸ்வரனும்கூட போர் தொடங்குமுன் கஜானனை நினைப்பதை மறந்து போரில் ஈடுபட்டார். ஈசனது தேரின் அச்சு விநாயகரால் பொடிப் பொடியாக்கப்பட்டது. மேலும் பல தடங்கல்கள் தேவர் படைகளுக்கு ஏற்பட்டன. அசுரனின் அக்கிரமம் தாங்க முடியாமல் தேவர்கள் பின்வாங்கினர். ஈஸ்வரனின் தோல்வியை அறிந்த பார்வதியும் மந்தார மலையைவிட்டு இமாலய பர்வதத்திற்குச் சென்றாள்.

பின்னர் திரிபுராசுரன் மந்தார மலைக்குச் சென்று சிந்தாமணி விக்ரகத்தை அபகரித்துக் கொண்டு திரும்பும் வழியில் சிந்தாமணி அவன் கரங்களிலிருந்து மறைந்து விடுகிறது. ஈஸ்வரனையே வென்ற களிப்பில் திரிபுராசுரன் திளைக்க அதர்மம் தலை தூக்கத் தொடங்கியது. இதனிடையில் நாரதர் சிவபெருமானைச் சந்தித்து திரிபுராசுரன் எந்த அளவு கஜானனை நினைந்து தவமிருந்தான் என்பதை எடுத்துரைத்தார். சிவபெருமான் தண்டகாரண்யத்திற்குச் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து விநாயகரின் ஆறெழுத்து மந்திரத்தை துதிக்கத் தொடங்கினார். சிவபெருமான் முகத்திலிருந்தே கஜானனன் தோன்றினார். ஐந்து முகங்களும் பத்துக் கரங்களும் சிரசில் சந்திரனும் சர்ப்பங்கள், புஷ்பங்கள் மாலைகளுமாய் அந்த வடிவம் விநாயகராகவும் ஈஸ்வரராகவும் ஒருமிக்க காட்சி அளித்தது. எனது பீஜாட்சர மந்திரத்தை உச்சரித்து நீங்கள் அம்பு எய்தால் திரிபுராசுரனின் முப்புரங்களும் எரிந்துவிடும்! எனது துதிகளைப் பாராயணம் செய்வோருக்கு எந்தவித இடைஞ்சல்களும் வராது எனக்கூறி, கஜானனன் அருளுகிறார். தேவர்களும் ஈஸ்வரனுடன் சேர்ந்து விநாயகரை ஆராதிக்கின்றனர். எந்த இடத்தில் விநாயகர் ஈசனுக்குக் காட்சி தந்தாரோ அவ்விடத்தில் விநாயகர் உதித்த வடிவத்தில் விக்ரகத்தை நிறுவி ஆலயத்தையும் எழுப்பினர்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மகாகணபதி இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar