Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலமுருகன்
  ஊர்: அகரம்
  மாவட்டம்: கிருஷ்ணகிரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூசம், தமிழ் வருடப்பிறப்பு, கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம்  
     
 தல சிறப்பு:
     
  இவ்வாலயத்தில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் அகரம், கிருஷ்ணகிரி.  
   
    
 பொது தகவல்:
     
  பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சிவன் நவக்கிரகங்கள், மடைப்பள்ளி உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள உற்சவர் சன்னதியில் பாலமுருகனையும், வள்ளி தெய்வானை சமேத முருகனையும் தரிசிக்கலாம்.
 
     
 
பிரார்த்தனை
    
  மணப்பேறு, மகப்பேறு உள்பட நினைத்த காரியங்கள் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  குழந்தை பாக்யம் இல்லாத பெண்கள் கோயிலுக்கு முன்பு உள்ள வில்வமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்ள விரைவில் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாராம் பாலமுருகன். 
    
 தலபெருமை:
     
  தீபஸ்தம்பம், மயூர மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறையில் கருணையே உருவாக பாலமுருகன் காட்சியளிக்கிறார். மயில் வாகனத்திற்கு முன்பு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்புரியும் அவர் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வழக்கமாக இப்பகுதி வழியாக லாரியில் சரக்குகள் ஏற்றிச் செல்லும்போது தவறாமல் அகரம் பாலமுருகனை அவர் வழிபட்டுச் செல்வாராம். ஒருநாள் வெளியூரில் தேங்காய்லோடு ஏற்றும்போது, தேங்காய் வியாபாரிடம் பாலமுருகனுக்கு உடைக்க லாரி டிரைவர் ஒரு தேங்காய் கேட்க, பாலமுருகனுக்கு கொம்பா முளைச்சிருக்கு? என்று கிண்டல் செய்து, தேங்காய் தர மறுத்தாராம். சில நிமிடங்களில் வியாபாரி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த தேங்காய் ஒன்றில் இரண்டு கொம்புகள் காணப்பட்டதாம். அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அந்த வியாபாரி, பாலமுருகனிடம் மானசீகமான மன்னிப்புக் கோரியதோடு, கொம்பு முளைத்த அந்த தேங்காயை கோயிலில் பாதுகாத்து வரச்சொல்லி, டிரைவரிடம் கொடுத்தனுப்பி விட்டாராம்.
 
     
  தல வரலாறு:
     
  பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு கதா காலட்ஷேபம் செய்ய முருகபக்தர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் அகரம் கிராமத்தில் அவரை சர்ப்பம் ஒன்று வழிமறித்தது. முருகா! ஏன் என்னைத் தடுக்கிறாய்? என்று கைகூப்பியபடி கேட்க, நாகம் நகரத் தொடங்கியது. அது தம்மை எங்கோ அழைத்துச் செல்ல முற்படுகிறது என்பதை உணர்ந்து. நாகத்தைப் பின்தொடர்ந்தார். அது புதர்மண்டிக்கிடந்த இடத்தில் புற்று ஒன்றின் அருகில் சென்றதும் திடீரென மறைந்து போனது. உடனே அந்த இடத்தை ஆராய்ந்து பார்க்க அங்கே ஒரு மண்டபமும் திருக்குளமும் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. பின்னர் விசாரிக்க, இப்பகுதியில் அன்னியர் படையெடுப்பின்போது பல ஆலயங்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் இந்த ஆலயமும் ஒன்று என்பதும் தெரியவந்தது. ஆறுமுகனுக்கு ஆலயம் ஒன்று கட்ட வேண்டுமென நீண்ட நாட்களாக எண்ணிக் கொண்டிருந்த அந்த பக்தர் அவ்விடத்தைச் சீர்படுத்தி அங்கே சிறிய பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகளையும் மேற்கொண்டார். பல வருடங்கள் வழிபாட்டிலிருந்த பழைய ஆலயத்திற்கப் பக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு புதிய ஆலயம் கட்டப்பட்டு, பழைய ஆலயத்திலிருந்த மூலவரையும் இங்கே பிரதிஷ்டை செய்ததோடு மேலும் புதிய சன்னதிகளையும் அமைத்திருக்கிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இவ்வாலயத்தில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar